ருசியான நெத்திலி மீன் தொக்கு சுலபமாக வீட்டிலேயே இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

 ஒரு சிலருக்கு கறியை விட மீன் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி மீன் பிரியர்களுக்கு நெத்திலி தொக்கு என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த நெத்திலி மீன்  சுத்தம் செய்து ருசியாக தொக்கு வைப்பது வரை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின்  தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

-விளம்பரம்-

பலருக்கு மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது அப்படியே தெரிந்தாலும் சுவையாக செய்ய தெரியாது, அதுவும் நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை குழம்பு தான் வைத்து சாப்பிடுவார்கள். அந்நாள் நெத்திலி மீனில் தொக்கு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அந்த சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.  சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு.

- Advertisement -

அந்தவகையில் இந்த நெத்திலி மீன் தொக்கு சுலபமாகவும், குறைந்தநேரத்தில், மிகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்றுதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசில் செய்து சுவைத்திடுகள்.

Print
5 from 1 vote

நெத்திலி மீன் தொக்கு | Anchovies Fish Curry Recipe In Tamil

பலருக்குமீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது அப்படியே தெரிந்தாலும் சுவையாக செய்யதெரியாது, அதுவும் நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை குழம்பு தான் வைத்து சாப்பிடுவார்கள்.அந்நாள் நெத்திலி மீனில் தொக்கு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அந்த சுவைக்குஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. நெ‌த்‌தி‌‌லி தொ‌க்கு செ‌ய்வது ‌மிகவு‌ம் எ‌ளிது‌ம், சுவையானது‌ம். அந்தவகையில்இந்த நெத்திலி மீன் தொக்கு சுலபமாகவும், குறைந்தநேரத்தில், மிகவும் சுவையாகவும் எப்படிசெய்யலாம் என்றுதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களைநன்கு படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசில் செய்து சுவைத்திடுகள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: curry
Cuisine: tamilnadu
Keyword: Anchovies Fish Curry
Yield: 4
Calories: 200kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ நெத்திலி மீன்
  • 10 சின்ன வெங்காயம்
  • 4 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லித் தூள்
  • 6 பல் பூண்டு
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 3 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • புளி எலுமிச்சைஅளவு
  • 1/2 கோப்பை தேங்காய்ப் பால்
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் நெத்திலி மீ‌னி‌ன் தலையை எடு‌த்து‌வி‌ட்டு உப்பு போட்டு ஒரு முறை உரா‌ய்‌ந்து ‌பி‌ன் நன்றாக கழுவிதண்ணீரை வடித்து வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் சிவந்ததும் பூண்டை தட்டி போடவும்.
  • பூண்டு லேசாக வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
  • இதனுடன் எல்லா மசாலா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, பின்னர் நறுக்கிய தக்காளி, நீளவாக்கில் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும்.
  • கட்டியாக கரைத்து வை‌த்‌திரு‌க்கு‌ம் புளியை ஊற்றி,தேவையான அளவு உ‌ப்பு சே‌ர்‌த்து ‌பு‌ளி‌‌‌யி‌ன் வாடைபோகும் வரை கொதிக்க விடவும்.
  • கடை‌சியாக‌த்தா‌ன் நெத்திலியை‌ப் போடவு‌ம். நெ‌த்‌தி‌லி ‌சீ‌க்‌கிர‌ம் வெ‌‌ந்து‌விடு‌ம். ‌பி‌ன்ன‌ர்தேங்காய்ப் பாலை சேர்த்து மீண்டும் குறைந்த தீயில் ஐந்து நிமிடம் விடவும்.
  • நெத்திலி கொதித்து கெட்டியானதும், கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

Nutrition

Serving: 200g | Calories: 200kcal | Carbohydrates: 11g | Protein: 29g | Sodium: 29mg