நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!
ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். நீங்கள் உலகின் எந்த ஒரு மூலை முடுக்கிலிருந்தும் உள்ள இந்தியரிடம் கேட்கலாம், உணவு சாப்பிடும் பொது சிறிய துண்டு ஊறுகாய் இல்லாமல் அவர்களின் நாள் நிறைந்ததாக இ
ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். நீங்கள் உலகின் எந்த ஒரு மூலை முடுக்கிலிருந்தும் உள்ள இந்தியரிடம் கேட்கலாம், உணவு சாப்பிடும் பொது சிறிய துண்டு ஊறுகாய் இல்லாமல் அவர்களின் நாள் நிறைந்ததாக இருக்காது என்று சொல்வார்கள்.
ஊறுகாய் சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்பது மட்டுமல்லாமல், ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது ஊறுகாய் சாப்பிடுவது ஆரோக்கியமான வழிமுறைகளில் ஒன்று என்பதால் இன்று நாம் சிக்கன் கொண்டு சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
சிக்கன் பிடிக்காதவர்களை பார்ப்பது அரிது. அது போலவே ஊறுகாயும். பிடிக்காத உணவாகவே இருந்தாலும் ஒரு ஸ்பூன் ஊறுகாய் இருந்தால் போதும் அந்த உணவை சாப்பிட சுவையாக இருக்கும். அந்தவகையில் எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய், கத்திரிக்காய் ஊறுகாய் எல்லாம் ருசித்து சலித்தவர்களுக்கு வித்தியாசமான சுவை கொண்ட சிக்கன் ஊறுகாய் செய்து கொடுக்கலாம். மற்ற பாரம்பரிய ஊறுகாயைப் போல பதப்படுத்தும் செயல்முறை இதற்குத் தேவையில்லை. இன்று சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!