Home Uncategorized உங்க வீட்ல அப்பளம் நிறைய இருக்கா அப்ப இந்த அப்பள குழம்பு செஞ்சு பாருங்க

உங்க வீட்ல அப்பளம் நிறைய இருக்கா அப்ப இந்த அப்பள குழம்பு செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல என்ன பண்டிகைகள் வந்தாலும் விசேஷங்கள் வந்தாலும் கடைசியா அப்பளம் பாயாசம் இல்லாமல் அந்த சாப்பாடு முழுமை அடையாதனே சொல்லலாம். அந்த அளவுக்கு அப்பளம் ஒரு விருந்து சாப்பாட்டில் முக்கியமானது. வீட்லயும் கூட காய்கறிகள் எதுவும் இல்லனா சட்டுனு நாலு அப்பளத்தை பொறுச்சு சைட் டிஷ் முடிச்சிடலாம். இந்த அப்பழத்த குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

அப்பளத்துல நிறைய வெரைட்டீஸ் இருந்தாலும் வட்ட அப்பளம் தான் நிறைய பேருக்கு பேவரட்டா இருக்கும் எல்லா விருந்துகளிலும் இருக்கும். முக்கியமா எல்லா விசேஷ வீடுகளிலும் கண்டிப்பா அப்பளம் வச்சிருப்பாங்க. சாப்பாட்டோட அப்பளம் சேர்த்து சாப்பிட்டாலும் டேஸ்ட் சூப்பரா இருக்கும் அதே நேரத்தில் பாயாசத்தோட அப்பளம் சேர்த்து வச்சு சாப்பிட்டாலும் செம டேஸ்டா இருக்கும்.

இவ்வளவு டேஸ்டா இருக்கக்கூடிய இந்த அப்பளத்தை சைடிஷா மட்டும் இல்லாம சும்மாவே வெறும் வாயில பொரிச்சு சாப்பிடலாம். ஆனா நம்ம வீட்ல காய்கறிகள் இல்லனா ஏதாவது ஒரு குழம்பு வச்சு அப்பளம் பொரிச்சு தானே சாப்பிடுவோம் ஆனா இப்போ அந்த அப்பளத்தை வைத்து ஒரு சுவையான குழம்பு வச்சு சாப்பிட போறோம்.

வீட்ல அவசரத்துக்கு காய்கறிகள் இல்ல அப்பளம் நிறையா இருக்கு அப்படின்னா கவலையே படாதீங்க இந்த அப்பளத்தை பொறுச்சு அதுல ஒரு சுவையான குழம்பு வச்சு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் செம டேஸ்டா இருக்கும். புளி குழம்புகளுக்கு சைட் டிஷ்ஷாவும் இதை வைத்து சாப்பிடலாம். இந்தக் குழம்பு கொஞ்சம் கெட்டியா வச்சா சைடிஷ்ஷாவும் வச்சு சாப்பிடலாம். ரெண்டு மூணு அப்பளம் இருந்தா கூட இந்த அப்பள குழம்ப நம்மளால சுவையா செய்ய முடியும். இப்ப வாங்க இந்த சுவையான அப்பள குழம்பு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

அப்பள குழம்பு | Appala Kulambu Recipe In Tamil

நம்ம வீட்ல என்ன பண்டிகைகள் வந்தாலும் விசேஷங்கள் வந்தாலும்கடைசியா அப்பளம் பாயாசம் இல்லாமல் அந்த சாப்பாடு முழுமை அடையாதனே சொல்லலாம். அப்பளத்துல நிறைய வெரைட்டீஸ் இருந்தாலும் வட்ட அப்பளம் தான் நிறைய பேருக்கு பேவரட்டா இருக்கும்எல்லா விருந்துகளிலும் இருக்கும். முக்கியமா எல்லா விசேஷ வீடுகளிலும் கண்டிப்பா அப்பளம்வச்சிருப்பாங்க. சாப்பாட்டோட அப்பளம் சேர்த்து சாப்பிட்டாலும் டேஸ்ட் சூப்பரா இருக்கும்அதே நேரத்தில் பாயாசத்தோட அப்பளம் சேர்த்து வச்சு சாப்பிட்டாலும் செம டேஸ்டா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Appala Kulambu
Yield: 4
Calories: 162kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  • 10 பல் பூண்டு
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 பெரிய அப்பளம்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அப்பளத்தை பொறித்து எடுத்துக் கொள்ளவும்
  • அதே கடாயில் கடுகு கடலைப்பருப்பு வெந்தயம் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு புளியை கரைத்து வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்
  • சாம்பார் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்
  • பத்து நிமிடங்கள் நன்றாக கொதித்த உடன் பொரித்து வைத்துள்ள அப்பளத்தை சிறு துண்டுகளாக நொறுக்கி அதில் போட்டு இறக்கினால் சுவையான அப்பளக் குழம்பு தயார்

Nutrition

Calories: 162kcal | Carbohydrates: 29g | Protein: 4.9g | Sodium: 189mg | Potassium: 209mg