Home சைவம் வெயிலுக்கு ஏற்ற சூப்பரான ஒரு ஆப்பிள் ஐஸ்கிரீம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வெயிலுக்கு ஏற்ற சூப்பரான ஒரு ஆப்பிள் ஐஸ்கிரீம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்கிரீம் அப்படின்னு சொன்னாலே சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா அந்த ஐஸ்கிரீம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் நமக்கு புடிச்ச மாதிரியான பழங்கள் வச்சு நம்மளை சூப்பரா ஹோம் மேடா ஐஸ்கிரீம் செஞ்சுக்கலாம். சாப்பிடறதுக்கும் ரொம்ப ஆரோக்கியமா ஜில்லுனு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அந்த வகையில் இப்ப நம்ம சூப்பரா ஆப்பிள் வைத்து செய்யக்கூடிய ஆப்பிள் ஐஸ் கிரீம் தான் பார்க்க போறோம்.

-விளம்பரம்-

வீட்ல ஆப்பிள் இருந்தா அத குழந்தைங்க சாப்பிட மேடம் பிடிக்கிறாங்க அப்படின்னா அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஆப்பிள் வைத்து சூப்பரான ஒரு ஐஸ்கிரீம் செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு பழங்கள் அதிகமா கொடுக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க ஆனால் குழந்தைங்க பழங்கள் காய்கறிகள் எல்லாம் சாப்பிட ஆரம்பிப்பாங்க.

அந்த மாதிரி நேரத்துல அவங்களுக்கு புடிச்ச மாதிரியான ஐஸ்கிரீம்ல ஆப்பிள் கலந்து கொடுத்துட்டோம் அப்படின்னா அவங்களுக்கு ஆப்பிள் சாப்பிட்ட மாதிரி இருக்கும் அதே நேரத்தில் ஐஸ்கிரீமை சாப்பிட்டு ஜாலியாகவும் ஆகிடுவாங்க. ஒரு நாள் நீங்களும் இந்த ஆப்பிள் ஐஸ் கிரீம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான ஆப்பிள் ஐஸ் கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

ஆப்பிள் ஐஸ்கிரீம் | Apple Ice cream Recipe In Tamil

வீட்ல ஆப்பிள் இருந்தா அத குழந்தைங்க சாப்பிடமேடம் பிடிக்கிறாங்க அப்படின்னா அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஆப்பிள் வைத்து சூப்பரான ஒரு ஐஸ்கிரீம் செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு பழங்கள் அதிகமா கொடுக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க ஆனால் குழந்தைங்க பழங்கள் காய்கறிகள் எல்லாம் சாப்பிட ஆரம்பிப்பாங்க. அவங்களுக்கு புடிச்ச மாதிரியான ஐஸ்கிரீம்ல ஆப்பிள் கலந்து கொடுத்துட்டோம் அப்படின்னா அவங்களுக்கு ஆப்பிள் சாப்பிட்ட மாதிரி இருக்கும் அதே நேரத்தில் ஐஸ்கிரீமை சாப்பிட்டு ஜாலியாகவும் ஆகிடுவாங்க.
Prep Time12 hours
Active Time20 minutes
Total Time12 hours 20 minutes
Course: Dessert
Cuisine: Italian, tamil nadu
Keyword: Apple Icecream
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 அகலமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பால்
  • 4 ஆப்பிள்
  • 4 டீஸ்பூன் சோள மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 2 கப் சர்க்கரை

செய்முறை

  • முதலில் ஆப்பிளை கழுவி சுத்தம் செய்து தோல் நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும். பால் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
  • வெண்ணெய் சர்க்கரை சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பிறகு அனைத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • அந்தக் கலவையை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து பிரிட்ஜுக்குள் ஆறு மணி நேரம் வைத்து எடுத்துக் கொள்ளவும்
  • மறுபடியும் அதனை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து மறுபடியும் பிளாஸ்டிக் டப்பாவிற்குள் வைத்து ஆறு மணி நேரம் பிரிட்ஜுக்குள் வைத்து எடுத்தால் சுவையான ஆப்பிள் ஐஸ் கிரீம் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 112kcal | Carbohydrates: 3.6g | Protein: 4.5g | Sodium: 6mg | Potassium: 17mg | Vitamin A: 31IU | Vitamin C: 28mg

இதையும் படியுங்கள் : குக் வித் கோமாளியில்‌ ஷ்ருத்திகா செய்த குளு குளு முள்ளங்கி ஐஸ்கிரீம் ரெசிபி இதோ!