Advertisement
சைவம்

சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான ஆப்பிள் மோர்க்குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்மாம சாப்பிடுவார்கள்!

Advertisement

மோர் குழம்பு மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவாகும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏராளமான உள்ளூர் வேறுபாடுகளுடன். ஆனால் இந்த ‌மோர்க்குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மோர்க்குழம்பு புகழ்பெற்று விளங்குகிறது. நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்களில் மசாலா பொருட்கள் இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம்.

மோர்க் குழம்பில் பலவகை உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி மோர்குழம்பு வைப்பார்கள். இப்போது நாம் தெரிந்துகொள்ள போகும் இந்த மோர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது. நாம் மோர்க் குழம்பு அடிக்கடி சாப்பிட்டிருப்போம். அந்த மோர்க் குழம்பில் ஆப்பிள் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிதுதான். குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் என்றால் அது மோர்க் குழம்பு.

Advertisement

சாம்பார், ரசம், புளிக்குழம்பு என ஒரேபோன்ற குழம்பு வைத்து சலித்துப்போனவர்களுக்கான சூப்பர் ஆப்ஷன், மோர்க்குழம்பு. அதிலும் சுவை அதிகரிக்க இங்கு பகிரப்பட்டுள்ள ஆப்பிள் சேர்த்து மோர் குழம்பு செய்து பாருங்கள். நிச்சயம் மறுமுறை செய்வீர்கள். ஒரு கப் தயிர் இருந்தாலே சட்டென்று செய்து அசத்தக் கூடிய இந்த மோர் குழம்பு, சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ‌இந்த ஆப்பிள் மோர்க்குழம்பை மிகவும் சுலபமாக செய்யலாம் அதே சமயத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அதன் சுவை இருக்கும். இப்போது இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆப்பிள் மோர்க்குழம்பு | Apple Mor Kulambu Recipe In Tamil

Print Recipe
மோர்க்குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மோர்க்குழம்பு புகழ்பெற்று விளங்குகிறது. நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில்
Advertisement
சில நாட்களில் மசாலா பொருட்கள் இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம். மோர்க் குழம்பில் பலவகை உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி மோர்குழம்பு வைப்பார்கள். இப்போது நாம் தெரிந்துகொள்ள போகும் இந்த மோர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது. நாம் மோர்க் குழம்பு அடிக்கடி சாப்பிட்டிருப்போம். அந்த மோர்க் குழம்பில் ஆப்பிள் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Apple Mor Kulambu
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 107

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 தாளிப்பு கரண்டி

Ingredients

  • 2 ஆப்பிள்
  • 1 கப் தயிர்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 4 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 வர ‌மிளகாய்
  • 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

Instructions

  • முதலில் ஆப்பிளை கழுவி விட்டு தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நறுக்கின ஆப்பிள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு வேக‌வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில், தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
  • தயிரை பௌலில் எடுத்து நன்கு கடைந்து கொள்ளவும்.
  • அதன்பிறகு வேகவைத்த ஆப்பிளுடன் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். பிறகு தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.‌
  • அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் வித்தியாசமான ஆப்பிள் மோர்க்குழம்பு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 107kcal | Carbohydrates: 27.6g | Protein: 4.5g | Fat: 2.6g | Potassium: 195mg | Fiber: 4.8g | Vitamin A: 2IU | Vitamin C: 4.7mg | Calcium: 6mg | Iron: 0.12mg

இதனையும் படியுங்கள் : ருசியான பருப்பு உருண்டை மோர்க்குழம்பு இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்! சுட சுட சாதத்துக்கு பக்காவான குழம்பு!

Advertisement
Prem Kumar

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

52 நிமிடங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

8 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

16 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago