- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
மோர் குழம்பு மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவாகும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏராளமான உள்ளூர் வேறுபாடுகளுடன். ஆனால் இந்த மோர்க்குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மோர்க்குழம்பு புகழ்பெற்று விளங்குகிறது. நாம் தினசரி மசாலா நிறைந்த உணவு பொருட்களையும் குழம்புகளையும் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் மாதத்தில் சில நாட்களில் மசாலா பொருட்கள் இல்லாத ரசம், மோர் குழம்புகள் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடலாம்.
மோர்க் குழம்பில் பலவகை உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி மோர்குழம்பு வைப்பார்கள். இப்போது நாம் தெரிந்துகொள்ள போகும் இந்த மோர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது. நாம் மோர்க் குழம்பு அடிக்கடி சாப்பிட்டிருப்போம். அந்த மோர்க் குழம்பில் ஆப்பிள் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிதுதான். குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் என்றால் அது மோர்க் குழம்பு.
சாம்பார், ரசம், புளிக்குழம்பு என ஒரேபோன்ற குழம்பு வைத்து சலித்துப்போனவர்களுக்கான சூப்பர் ஆப்ஷன், மோர்க்குழம்பு. அதிலும் சுவை அதிகரிக்க இங்கு பகிரப்பட்டுள்ள ஆப்பிள் சேர்த்து மோர் குழம்பு செய்து பாருங்கள். நிச்சயம் மறுமுறை செய்வீர்கள். ஒரு கப் தயிர் இருந்தாலே சட்டென்று செய்து அசத்தக் கூடிய இந்த மோர் குழம்பு, சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த ஆப்பிள் மோர்க்குழம்பை மிகவும் சுலபமாக செய்யலாம் அதே சமயத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அதன் சுவை இருக்கும். இப்போது இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான பருப்பு உருண்டை மோர்க்குழம்பு இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்! சுட சுட சாதத்துக்கு பக்காவான குழம்பு!
Ingredients
Method
முதலில் ஆப்பிளை கழுவி விட்டு தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நறுக்கின ஆப்பிள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில், தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
தயிரை பௌலில் எடுத்து நன்கு கடைந்து கொள்ளவும்.
அதன்பிறகு வேகவைத்த ஆப்பிளுடன் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். பிறகு தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் வித்தியாசமான ஆப்பிள் மோர்க்குழம்பு தயார்.






