சுவையான ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் ஒரு தரம் இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம குடிப்பாங்க!
மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா? அதிலும் ஆப்பிள் மற்றும் மாதுளம் பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலின் வலிமை இன்னும் அதி
மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா? அதிலும் ஆப்பிள் மற்றும் மாதுளம் பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலின் வலிமை இன்னும் அதிகரிக்கும். பழங்கள் மற்றும் பழச்சாறுகள் உடம்பிற்கு மிகவும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது உடம்புக்கு மிகவும் சத்தான ஆப்பிள் மற்றும் மாதுளம் பழம் கொண்டு செய்யப்படும் ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை. இந்த மில்க் ஷேக் செய்வதற்கு பால், ஆப்பிள் மற்றும் மாதுளை பழம் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம்.
மாதுளையில் வைட்டமின் சி, ஏ மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது. மேலும் ஆய்வுகள் பலவற்றில் மாதுளையை அதிகம் சாப்பிட்டால், இதய நோய், புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையையும் குறைக்கும். மேலும் மாதுளம் பழத்தை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட மாதுளம் பழத்தை இவ்வாறு மில்க் ஷேக்காக செய்து கொடுத்தால் அதை விரும்பி பருகுவார்கள். வெளியில் சுற்றி வீட்டிற்கு வந்ததும் இந்த மில்க் ஷேக் குடித்தால், இழந்த புத்துணர்வை மீண்டும் பெறலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டிலயே மில்க் செய்யாலம் சுவையான பப்பாளி நட்ஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!