சுவையான ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் ஒரு தரம் இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம குடிப்பாங்க!

- Advertisement -

மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா? அதிலும் ஆப்பிள் மற்றும் மாதுளம் ‌பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலின் வலிமை இன்னும் அதிகரிக்கும். பழங்கள் மற்றும் பழச்சாறுகள் உடம்பிற்கு மிகவும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

-விளம்பரம்-

அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது உடம்புக்கு மிகவும் சத்தான ஆப்பிள் மற்றும் மாதுளம் பழம் கொண்டு செய்யப்படும் ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை. இந்த மில்க் ஷேக் செய்வதற்கு பால், ஆப்பிள் ‌மற்றும் மாதுளை பழம் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம்.

- Advertisement -

மாதுளையில் வைட்டமின் சி, ஏ மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது. மேலும் ஆய்வுகள் பலவற்றில் மாதுளையை அதிகம் சாப்பிட்டால், இதய நோய், புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையையும் குறைக்கும். மேலும் மாதுளம் பழத்தை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட மாதுளம் பழத்தை இவ்வாறு மில்க் ஷேக்காக செய்து கொடுத்தால் அதை விரும்பி பருகுவார்கள். வெளியில் சுற்றி வீட்டிற்கு வந்ததும் இந்த மில்க் ஷேக் குடித்தால், இழந்த புத்துணர்வை மீண்டும் பெறலாம்.

Print
3.67 from 3 votes

ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் | Apple Pomegranate Milk Shake Recipe In Tamil

மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா? அதிலும் ஆப்பிள் மற்றும் மாதுளம் ‌பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலின் வலிமை இன்னும் அதிகரிக்கும். பழங்கள் மற்றும் பழச்சாறுகள் உடம்பிற்கு மிகவும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது உடம்புக்கு மிகவும் சத்தான ஆப்பிள் மற்றும் மாதுளம் பழம் கொண்டு செய்யப்படும் ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Drinks
Cuisine: Indian
Keyword: Apple Pomegranate Milk Shake
Yield: 2 People
Calories: 234kcal

Equipment

 • 1 பவுள்
 • 1 மிக்ஸி
 • 1 கண்ணாடி டம்ளர்

தேவையான பொருட்கள்

 • 2 ஆப்பிள்
 • 2 மாதுளை
 • 10 பாதாம்
 • 10 முந்திரி
 • 2 கப் பால்
 • 3/4 கப் சர்க்கரை
 • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பாதாம், முந்திரி

செய்முறை

 • முதலில் ஆப்பிளை நன்கு கழுவி விட்டு தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மாதுளம் பழத்தை உரித்து வைத்துக் கொள்ளவும்.
 • பாலை ஒரு பாத்திரத்தில் உற்றி பால் பாதியளவு வரும் வரை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு மிக்ஸி ஜாரில், ஆப்பிள், மாதுளம் பழம், முந்திரி, பாதாமை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 • பிறகு சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு கண்ணாடி டம்ளரில் வடிகட்டி வைத்து வடிகட்டி கொள்ளவும்.
 • அதன் மேல் நறுக்கிய பாதாம், முந்திரி, கொஞ்சம் மாதுளை, ஆப்பிள் துண்டுகள் சேர்த்து அலங்கரித்தால் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 234kcal | Carbohydrates: 29g | Protein: 4.7g | Fat: 3.3g | Sodium: 1.44mg | Potassium: 289mg | Fiber: 11.3g | Sugar: 4.3g | Vitamin C: 6.1mg | Calcium: 3mg | Iron: 4.3mg

இதனையும்‌ படியுங்கள் : வீட்டிலயே மில்க் செய்யாலம் சுவையான பப்பாளி நட்ஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!