- Advertisement -
தென்னிந்தியாவில் சைவ மத்திய உணவு , சைவ விருந்து என்றல் ஒரு நல்ல சாம்பார் இல்லாமல் திருப்தி தருவதில்லை .. பூசணிக்காய் சாம்பார் பல வீட்டில் முக்கிய உணவு. இது ஒரு எளிய, ஆரோக்கியமான மற்றும் மிகவும் திருப்திகரமான உணவாகும். சாம்பல் பூசணிக்காய் நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
-விளம்பரம்-
நாம் வீட்டில் அடிக்கடி செய்யும் உணவான சாம்பாரில் வெண் பூசணி சேர்த்து சமைத்து எடுத்துக்கொண்டால் உடலுக்கும் ஆரோக்கியம், மற்றும் சுவையும் அலாதியாக கிடைக்கும். . எப்போதும் ஒரேமாதிரியாக சாம்பார் இல்லாமல் இது போல பூசணி சாம்பார் வைத்தால் குடும்பத்தாரையும் அசத்திவிடலாம். சுவையான பூசணி சாம்பார் ரெசிபியை சுலபமாக வைப்பது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
- Advertisement -
சாம்பல் பூசணி பருப்பு சாம்பார் | Ash Gourd Sambar Recipe In Tamil
தென்னிந்தியாவில் சைவ மத்திய உணவு , சைவ விருந்து என்றல் ஒரு நல்ல சாம்பார் இல்லாமல் திருப்தி தருவதில்லை..பூசணிக்காய் சாம்பார் பல வீட்டில் முக்கியஉணவு. இது ஒரு எளிய, ஆரோக்கியமான மற்றும் மிகவும் திருப்திகரமான உணவாகும். சாம்பல்பூசணிக்காய் நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நாம் வீட்டில் அடிக்கடி செய்யும் உணவான சாம்பாரில் பூசணி சேர்த்து சமைத்து எடுத்துக்கொண்டால் உடலுக்கும் ஆரோக்கியம், மற்றும் சுவையும்அலாதியாக கிடைக்கும்.
Yield: 4
Calories: 130kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ பூசணிக்காய்
- 1 பெரிய வெங்காயம்
- 1 பெரிய தக்காளி
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 பச்சை மிளகாய்
- 2 மிளகாய் வற்றல்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1 கப் துவரம் பருப்பு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் சீரகத் தூள்
- டீஸ்பூன் பூண்டு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- எண்ணெய் தேவைக்கேற்ப
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
- குக்கரில் பருப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், பூண்டு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி வைக்கவும்.
- பருப்பு வெந்ததும் அதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூசணிக்காய், மல்லி இலை மற்றும் உப்பு சேர்க்கவும்.
- தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த தேங்காயை பூசணிக்காய் மற்றும் . பருப்புடன் சேர்த்து குக்கரை மூடி விடவும். மீண்டும் ஒரு விசில் விடவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
- தாளித்ததை வெந்த பூசணி பருப்பில் கொட்டி கலந்து விடவும். இப்போது சுவையான சாம்பல் பூசணி பருப்பு சாம்பார் தயார். இதனுடன் இட்லி, தோசை, சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.
Nutrition
Serving: 800g | Calories: 130kcal | Carbohydrates: 21g | Protein: 13g | Fat: 1g | Potassium: 327mg | Fiber: 2.8g | Calcium: 52mg