Advertisement
சைவம்

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

Advertisement

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் அங்கிருக்கும் சமையல் முறைக்கேற்ப பல மாற்றங்களோடு செய்யப்படுகிறது. அவ்வகையில் இங்கு நாம் காண இருப்பது பர்மாவில் செய்யப்படும் அத்தோ முறை. இதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு அதற்கு மாலை நேரங்களில் அத்தோ கடைகளில் நாம் காண கூடிய கூட்டமே சாட்சி. நூடுல்ஸ் உடன் சேர்க்கப்படும் வெட்டிய முட்டைக்கோஸ், வெங்காயம் இவற்றுடன், உப்பு, தண்ணீர், பூண்டு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் சேர்த்து தயாரிக்கப்படும் அத்தோவின் சுவை அலாதியானது.

பர்மா உணவு முறையை சார்ந்த இவை மெல்ல மெல்ல பர்மா மக்கள் இடம் பெயர்ந்த நாடுகளில் எல்லாம் பிரபலமடைந்தது. அதற்கு காரணம் இதனின் வித்தியாசமான சுவை தான். இதை விரும்புபவர்கள் பெரும்பாலும் இதை அத்தோ கடைகளில் தான் வாங்கி சுவைக்கிறார்கள். ஆனால் இதை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் வெகு சுலபமாக செய்து விடலாம். சமைக்கத் தெரியாதவர்கள் கூட சிரமமின்றி செய்யக்கூடிய உணவு தான் இது. மேலும் நாம் வழக்கமாக உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று உணவும் கூட. வீட்டிலேயே மிக எளிமையாக செய்யக்கூடிய அத்தோ என்னும் பர்மா உணவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Advertisement

அத்தோ | Atho Recipe In Tamil

Print Recipe
அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் அங்கிருக்கும் சமையல் முறைக்கேற்ப பல மாற்றங்களோடு செய்யப்படுகிறது. அவ்வகையில் இங்கு நாம் காண இருப்பது பர்மாவில் செய்யப்படும் அத்தோ முறை. இதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு அதற்கு மாலை நேரங்களில் அத்தோ கடைகளில் நாம் காண கூடிய கூட்டமே சாட்சி. நூடுல்ஸ் உடன் சேர்க்கப்படும் வெட்டிய முட்டைக்கோஸ், வெங்காயம் இவற்றுடன், உப்பு, தண்ணீர்,
Advertisement
பூண்டு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் சேர்த்து தயாரிக்கப்படும் அத்தோவின் சுவை அலாதியானது. பர்மா உணவு முறையை சார்ந்த இவை மெல்ல மெல்ல பர்மா மக்கள் இடம் பெயர்ந்த நாடுகளில் எல்லாம் பிரபலமடைந்தது. அதற்கு காரணம் இதனின் வித்தியாசமான சுவை தான்.
Course dinner
Cuisine Indian
Keyword Atho
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 2 People
Calories 185
Advertisement

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் நூடுல்ஸ்
  • 1/2 கப் முட்டைக்கோஸ்
  • 2 பெரிய வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 2 டேபிள் ஸ்பூன் புளி கரைசல்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 1 கேரட்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 8 வர ‌மிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் நூடுல்ஸ், கேசரி பவுடர், உப்பு, எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் முட்டைகோஸ், கேரட்டை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் மிளகாயை சேர்த்து வறுத்து அதனை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸ், நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், கேரட், வதக்கி வைத்த பூண்டு, புளி கரைசல், அரைத்து வைத்துள்ள மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லித்தழை, வறுத்த வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான அத்தோ தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 185kcal | Carbohydrates: 3.1g | Protein: 10.2g | Fat: 5.2g | Saturated Fat: 1.9g | Sodium: 115mg | Potassium: 138mg | Fiber: 7.8g | Calcium: 39mg | Iron: 6.2mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பன்னீர் நூடுல்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! இரவு டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

3 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

9 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

19 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago