Advertisement
சைவம்

வீட்ல அவல்  இருந்தா ஒரு தடவை இந்த அவல் பர்பி செஞ்சு சாப்பிட்டு பாருங்க! பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!

Advertisement

நம்ம கடலை பர்பி தேங்காய் பர்பி அப்படின்னு நிறைய கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த அவல் பர்பிய கண்டிப்பா நம்ம சாப்பிட்டு இருக்கவே மாட்டோம். ஆனா இந்த அவல் பர்பி சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும். இதுக்கு நீங்க வெள்ளை சர்க்கரை சேர்த்து செய்வதாக இருந்தாலும் செய்யலாம் இல்லனா கருப்பட்டி சேர்த்து செய்வதாக இருந்தாலும் செய்யலாம் ரெண்டுமே டேஸ்ட் சூப்பரா இருக்கும். ஆனா கருப்பட்டி வச்சு செஞ்சா இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமானதாவே இருக்கும்.

நம்ம வீட்ல அவல் இருந்தா அத ஊற வச்சு அதுல சக்கரையும் தேங்காய் பூவும் போட்டு ஒரு சிலர் சாப்பிடுவாங்க ஆனா ஒரு சில குழந்தைகளுக்கு அப்படி சாப்பிடுவது பிடிக்காது அப்ப அவங்களுக்கு இந்த சத்தான சிவப்பு அவல் வச்சு சூப்பரா அவல் பர்பி செஞ்சு குடுங்க வீட்டிலேயே செய்றதால அது ஆரோக்கியமாகவும் இருக்கும் கருப்பட்டி வச்சு செய்றதால இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் குறிப்பா பெண் குழந்தைகளுக்கு கருப்பட்டி நம்ம குடுக்குறது ரொம்பவே நல்லது.

Advertisement

அதுமட்டுமில்லாமல் கடைகளில் போய் குழந்தைங்க ஆரோக்கியம் இல்லாத சில ஸ்நாக்ஸ வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்லயே இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா குழந்தைங்க வெளியில் கடைக்கு போய் ஏதாவது வாங்கி சாப்பிடணும் அப்படின்னு நினைக்கவே மாட்டாங்க. எப்பவுமே  குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் நம்ம வீட்டிலேயே செஞ்சு கொடுத்தா ரொம்ப நல்லது. இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான டேஸ்டான அட்டகாசமான அவள் பர்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

அவல் பர்பி | Aval Burfi Recipe In Tamil

Print Recipe
நம்ம கடலை பர்பி தேங்காய் பர்பி அப்படின்னு நிறைய கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த அவல் பர்பிய கண்டிப்பா நம்ம சாப்பிட்டு இருக்கவே மாட்டோம். ஆனா இந்த
Advertisement
அவல் பர்பி சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும். இதுக்கு நீங்க வெள்ளை சர்க்கரை சேர்த்து செய்வதாக இருந்தாலும் செய்யலாம் இல்லனா கருப்பட்டி சேர்த்து செய்வதாக இருந்தாலும் செய்யலாம் ரெண்டுமே டேஸ்ட் சூப்பரா இருக்கும். ஆனா கருப்பட்டி வச்சு செஞ்சா இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமானதாவே இருக்கும்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Aval Burfi
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 113

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் அவல்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1/2 கப் கருப்பட்டி
  • 4 ஏலக்காய்
  • 5 முந்திரி
  • 5 பாதாம் பருப்பு
  • 5 பிஸ்தா
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 சிட்டிகை உப்பு

Instructions

  • முதலில் ஒரு கடாயில் அவல் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸிஜாரில் போட்டு பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்
  •  
    பிறகு அதே கடாயில் நெய் ஊற்றி அதில் தேங்காய் துருவல் போட்டு வறுத்து எடுத்து அதனை மாற வைத்து அவல்பொடியுடன் சேர்த்து அதையும் அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு அடி கனமான கடாயில் தண்ணீர் சேர்த்து கருப்பட்டியும் சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி மறுபடியும் அதே கடாயில் சேர்த்துக் கொள்ளவும்
  • அதனுடன் அரைத்து வைத்துள்ள அவல் தேங்காய் கலவையை சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்
  • பிறகு அதில் ஏலக்காய் சேர்த்து நன்றாக சுருண்டு வரும் வரை 15 நிமிடங்களுக்கு கிளறிக் கொண்டே இருக்கவும். 15 நிமிடங்கள் கழித்து கடாயில் அந்த கலவை ஒட்டாமல் வரும் பொழுது அதனை எடுத்து ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்
  • அதன் மேல் முந்திரி பாதாம், பிஸ்தா அனைத்தையும் பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதனை உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்தால் சுவையான அவல் பர்பி தயார்

Nutrition

Serving: 150g | Calories: 113kcal | Carbohydrates: 46g | Protein: 23g | Sodium: 18mg | Potassium: 62mg | Calcium: 11.1mg

இதையும் படியுங்கள் : வாயில் வைத்தவுடன் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ரோஸ் மில்க் பர்பி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

2 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

11 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

12 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

13 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

14 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

17 மணி நேரங்கள் ago