எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65 போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பேபி கார்ன் வைத்து சுவையான பேபி கார்ன் மஞ்சூரியன் செய்ய உள்ளோம். இதனை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி ம

By Prem Kumar · 27/4/2024

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65 போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பேபி கார்ன் வைத்து சுவையான பேபி கார்ன் மஞ்சூரியன் செய்ய உள்ளோம். இதனை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும். மஞ்சூரியன் என்ற பெயரை கேட்டவுடன் அது அதே நான் வெஜ் உணவு என்று தான் நினைக்கத்தோணும்.

ஆனால் மஞ்சூரியன் என்றால் காய்கறிகளால் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி. சைவம் என்றாலும் அசைவ சுவையை தரும் உணவு தான் பேபி கார்ன் மஞ்சூரியன். முன்பெல்லாம் அதிகளவில் புழக்கத்தில் இல்லாத பேபி கார்ன் இப்போது எந்த கடைகளில் பார்த்தாலும் மெனு கார்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த மஞ்சூரியன் சீனாவிலிருந்து கல்கத்தாவிற்கு வந்து தங்கிய மக்கள் இந்திய மற்றும் சீன உணவு முறைகளை கலந்து உருவாக்கியதே. பேபி கார்ன் நார் சத்து நிறைந்தது. ஃபோலிக் ஆசிட் , வைட்டமின் B1, இரும்புச் சத்து ஆகியவை நிறைந்துள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு சோளம் பல வகைகளில் நன்மை தருகிறது.

எடைக் கட்டுப்பாடுகள் கொண்டவர்கள் கார்ன் தாராளமாக உண்ணலாம். பேபி கார்ன் மஞ்சூரியன் தற்பொழுது இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவு வகை. இது எல்லா விதமான விழாக்கள் மற்றும் திருமணங்களிலும் சிறப்பு உணவாக இடம் பெறுகிறது. இந்த பேபி கார்ன் மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்ப சுவையா இருக்கும். குறிப்பாக இது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும். இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை ரோட்டுக்கடை ஸ்டைலில் எப்படி வீட்டிலேயே செய்வது என்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் முட்டைகோஸ் மஞ்சூரியன் இப்படி செய்து பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full