Advertisement
சைவம்

இரவு டிபனுக்கு ருசியான பீட்ரூட் பூரி ஒரு முறை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க! பிறகு நம்ம வீட்டில் செய்யுற சாதாரண பூரியை செய்ய மாட்டீங்க!!

Advertisement

பூரி அப்படின்னாலே நமக்கு ஞாபகம் வருது மைதா மாவும் ,கோதுமை மாவு தான். இன்னும் நம்ம சொல்லப்போனால் நிறைய மாவுகளை கலந்து பூரி எல்லாம் போட்டுட்டு இருக்காங்க.ஆனாலும் இப்போ நம்ம போட போற பூரி ரொம்பவே புதுவிதமான ஒரு பூரி.

இந்த பூரிய எதுல பண்ண போறோம் அப்படின்னா பீட்ரூட் சேர்த்து பண்ண போறோம். இந்த பீட்ரூட் உடலுக்கு ரொம்பவே நல்லது நம்ம பீட்ரூட் பொரியல் இப்போ அதிகமா பயன்படுத்திட்டு இருக்கோம். பொரியல் செய்து கொடுத்தோம்னா குழந்தைகள் பீட்ரூட்ட விரும்பி சாப்பிட மாட்டாங்க.

Advertisement

அப்படி பீட்ரூட்டை விரும்பி சாப்பிட அவங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவில் பீட்ரூட்டை சேர்த்துக் கொடுக்கணும் .  ஏதோ ஒரு வகையில் இந்த பீட்ரூட்டை நம்ம உணவில் சேர்த்து கொண்டோம் அப்படின்னா நமக்கு  அதிக அளவு புரதச்சத்தும் , இரும்பு சத்து அதிகமாக கிடைக்கும். அப்படி ஏதாவது ஒரு வகைல அந்த பீட்ரூட்டை நம்ம உணவில் சேர்த்துக்கணும். வாங்க இப்போது எப்படி அந்த பீட்ரூட் பூரி செய்யலாமுனு பார்க்கலாம்.

பீட்ரூட் பூரி | Beet root Poori Recipe In Tamil

Print Recipe
பூரி அப்படின்னாலே நமக்கு ஞாபகம் வருது மைதா மாவும்,கோதுமை மாவு தான். இன்னும் நம்ம சொல்லப்போனால் நிறைய மாவுகளை கலந்து பூரி எல்லாம்போட்டுட்டு இருக்காங்க. பீட்ரூட்டை விரும்பி சாப்பிட அவங்களுக்கு பிடித்த ஏதாவதுஒரு உணவில் பீட்ரூட்டை சேர்த்துக் கொடுக்கணும் . ஏதோ ஒரு வகையில் இந்த பீட்ரூட்டை நம்ம உணவில் சேர்த்து கொண்டோம் அப்படின்னா நமக்கு  அதிக அளவு புரதச்சத்தும் , இரும்புசத்து அதிகமாக கிடைக்கும். அப்படி ஏதாவது ஒரு வகைல அந்த பீட்ரூட்டை
Advertisement
நம்ம உணவில் சேர்த்துக்கணும். வாங்க இப்போது எப்படி அந்த பீட்ரூட் பூரி செய்யலாமுனு பார்க்கலாம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Beet Root Poori
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 328

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் கோதுமை மாவு
  • 1 பீட்ரூட்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் பீட்ரூட்டை தோலை சீவி விட்டு கேரட் துருவதில் துருவி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  • பிறகு மிக்ஸியில் ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய், சீரகம், மிளகு, இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அரைத்து வைத்த பீட்ரூட்டை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.  தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு சேர்த்து நன்றாகபிசைந்து கொள்ளவும்.
  • மாவை பிசைந்த பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்து விடவும்.
  • பிறகு பூரி சுடுவதற்காக அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான  அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
  • எண்ணெய் காய்வதற்குள் பிசைந்து வைத்துள்ள பீட்ரூட் பூரி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி இடும் கல்லில் வைத்து பூரிகளாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
  • தேய்த்து எடுத்து வைத்துள்ள பூரிகளை காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்தால்சுவையான ஆரோக்கியமிக்க பீட்ரூட் பூரி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 328kcal | Carbohydrates: 72g | Protein: 7.3g | Fiber: 11.5g | Iron: 6.3mg

இதையும் படியுங்கள் : ருசியான பீட்ரூட் குருமா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சப்பாத்திக்கு பூரிக்கு அருமையான ரெசிபி மிஸ் பண்ணாதீங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

35 நிமிடங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

58 நிமிடங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

2 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

3 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

7 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

7 மணி நேரங்கள் ago