இரவு டிபனுக்கு ருசியான பீட்ரூட் பூரி ஒரு முறை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க! பிறகு நம்ம வீட்டில் செய்யுற சாதாரண பூரியை செய்ய மாட்டீங்க!!

- Advertisement -

பூரி அப்படின்னாலே நமக்கு ஞாபகம் வருது மைதா மாவும் ,கோதுமை மாவு தான். இன்னும் நம்ம சொல்லப்போனால் நிறைய மாவுகளை கலந்து பூரி எல்லாம் போட்டுட்டு இருக்காங்க.ஆனாலும் இப்போ நம்ம போட போற பூரி ரொம்பவே புதுவிதமான ஒரு பூரி.

-விளம்பரம்-

இந்த பூரிய எதுல பண்ண போறோம் அப்படின்னா பீட்ரூட் சேர்த்து பண்ண போறோம். இந்த பீட்ரூட் உடலுக்கு ரொம்பவே நல்லது நம்ம பீட்ரூட் பொரியல் இப்போ அதிகமா பயன்படுத்திட்டு இருக்கோம். பொரியல் செய்து கொடுத்தோம்னா குழந்தைகள் பீட்ரூட்ட விரும்பி சாப்பிட மாட்டாங்க.

- Advertisement -

அப்படி பீட்ரூட்டை விரும்பி சாப்பிட அவங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவில் பீட்ரூட்டை சேர்த்துக் கொடுக்கணும் .  ஏதோ ஒரு வகையில் இந்த பீட்ரூட்டை நம்ம உணவில் சேர்த்து கொண்டோம் அப்படின்னா நமக்கு  அதிக அளவு புரதச்சத்தும் , இரும்பு சத்து அதிகமாக கிடைக்கும். அப்படி ஏதாவது ஒரு வகைல அந்த பீட்ரூட்டை நம்ம உணவில் சேர்த்துக்கணும். வாங்க இப்போது எப்படி அந்த பீட்ரூட் பூரி செய்யலாமுனு பார்க்கலாம்.

Print
1 from 1 vote

பீட்ரூட் பூரி | Beet root Poori Recipe In Tamil

பூரி அப்படின்னாலே நமக்கு ஞாபகம் வருது மைதா மாவும்,கோதுமை மாவு தான். இன்னும் நம்ம சொல்லப்போனால் நிறைய மாவுகளை கலந்து பூரி எல்லாம்போட்டுட்டு இருக்காங்க. பீட்ரூட்டை விரும்பி சாப்பிட அவங்களுக்கு பிடித்த ஏதாவதுஒரு உணவில் பீட்ரூட்டை சேர்த்துக் கொடுக்கணும் . ஏதோ ஒரு வகையில் இந்த பீட்ரூட்டை நம்ம உணவில் சேர்த்து கொண்டோம் அப்படின்னா நமக்கு  அதிக அளவு புரதச்சத்தும் , இரும்புசத்து அதிகமாக கிடைக்கும். அப்படி ஏதாவது ஒரு வகைல அந்த பீட்ரூட்டை நம்ம உணவில் சேர்த்துக்கணும். வாங்க இப்போது எப்படி அந்த பீட்ரூட் பூரி செய்யலாமுனு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Beet Root Poori
Yield: 4
Calories: 328kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கோதுமை மாவு
  • 1 பீட்ரூட்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பீட்ரூட்டை தோலை சீவி விட்டு கேரட் துருவதில் துருவி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  • பிறகு மிக்ஸியில் ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய், சீரகம், மிளகு, இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அரைத்து வைத்த பீட்ரூட்டை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.  தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு சேர்த்து நன்றாகபிசைந்து கொள்ளவும்.
  • மாவை பிசைந்த பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்து விடவும்.
  • பிறகு பூரி சுடுவதற்காக அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான  அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
  • எண்ணெய் காய்வதற்குள் பிசைந்து வைத்துள்ள பீட்ரூட் பூரி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி இடும் கல்லில் வைத்து பூரிகளாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
  • தேய்த்து எடுத்து வைத்துள்ள பூரிகளை காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்தால்சுவையான ஆரோக்கியமிக்க பீட்ரூட் பூரி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 328kcal | Carbohydrates: 72g | Protein: 7.3g | Fiber: 11.5g | Iron: 6.3mg

இதையும் படியுங்கள் : ருசியான பீட்ரூட் குருமா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சப்பாத்திக்கு பூரிக்கு அருமையான ரெசிபி மிஸ் பண்ணாதீங்க!