பொதுவாக நம் வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக பெரும்பாலும் தோசை தான் சூடுவோம் ஏனென்றால் நம் வீட்டில் உள்ளவர்கள் இட்லியை காட்டிலும் தோசையை தான் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான தோசை செய்து கொடுத்தால் செய்யும் நமக்கும் சலித்து போகும் சாப்பிடும் அவர்களுக்கும் சலித்து போகும் ஆகையால் இன்று ஒரு வித்தியாசமான தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம்.
இதையும் படியுங்கள் : சுவையான பச்சை பட்டாணி தோசை செய்வது எப்படி ?
ஆம் இன்று பீட்ரூட் தோசை நாம் செய்து பார்க்க போகிறோம், குழந்தைகள் காய்கறிகளை வேண்டாம் என்று ஒதுக்கும்போது அவர்களுக்கு பிடித்த தோசையுடன் சேர்த்து அதை செய்யும் பொழுது அவர்கள் இதை ஒதுக்க முடியாது மிகவும் விரும்பி இந்த பீட்ரூட் தோசையை சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சூவையில் இருக்கும் ஏன் உங்க வீட்டில் உள்ள பெரியோர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பீட்ரூட் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பீட்ரூட் தோசை | Beetroot Dosai Recipe in Tamil
Equipment
- 1 தோசை கல்
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 பீட்ரூட் நறுக்கியது
- 3 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- கல் உப்பு சிறிது
- 1 பவுள் தோசை மாவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் நாம் எடுத்துக் கொண்ட பீட்ரூட்டின் மேற் புறத்தோல்களை சீவி பொடி பொடி துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின் நறுக்கிய பீட்ரூட்டை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.
- பின் அதனுடன் மூன்று பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, சிறிது கல்லு உப்பு சேர்த்து முதலில் திருதிருவன அரைத்து கொள்ளுங்கள். பின் சிறிது அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின் ஒரு பவுள் நிறைய தோசை மாவு எடுத்துக் கொண்டு நாம் மிக்ஸியில் அரைத்த பீட்ரூட்டை தோசை மாவுடன் கலந்து நன்கு கலக்கி கொள்ளுங்கள்.
- நாம் பீட்ரூட்டை அரைத்து மாவுடன் சேர்த்து இருப்பதால் தோசை கல்லுடன் ஒட்டி வரும் ஆகையால் வேண்டுமென்றால் ஒரு முட்டை சேர்த்து கலந்து கொள்ளவும் இல்லையென்றால் பார்த்து பக்குவமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- அதன் பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் நன்கு காய்ந்ததும் இரண்டு கரண்டி மாவை எடுத்து கல்லில் ஊற்றி தோசையை அதிகம் விரித்து விடாமல் ஊற்றிக் கொள்ளவும்.
- பின் இருபுறமும் தோசையை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் தோசை தயாராகிவிட்டது. இதனுடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது அட்டகாசமான சுவையில் இருக்கும்.