Advertisement
சைவம்

சுவையான பீட்ரூட் புலாவ் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

Advertisement

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வித்தியாசமான ‘பீட்ரூட் புலாவ்’
பீட்ரூட் வைத்து அட்டகாசமான சுவையில் புலாவ் செய்து பார்த்தால் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த பீட்ரூட் புலாவ் ரொம்பவே வித்தியாசமான சுவையும், ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கிறது.

வெறும் பத்து நிமிடத்தில் சுவையான பீட்ரூட் புலாவ் எளிதாக வீட்டிலேயே செய்து பாருங்கள. வித்தியாசமான சுவையுடைய ‘பீட்ரூட் புலாவ்’ சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி செய்வது? என்பதைத் தெரிந்து கொள்ள நீங்களும் தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Advertisement

பீட்ரூட் புலாவ் | Beetroot Puloa Recipe in Tamil

Print Recipe
பீட்ரூட் புலாவ்,உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வித்தியாசமான ‘பீட்ரூட் புலாவ்’ வைத்து அட்டகாசமான சுவையில் புலாவ் செய்து பார்த்தால் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த பீட்ரூட் புலாவ் ரொம்பவே வித்தியாசமான சுவையும், ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கிறது. வெறும் பத்து நிமிடத்தில் சுவையான பீட்ரூட் புலாவ் எளிதாக வீட்டிலேயே செய்து பாருங்கள. வித்தியாசமான சுவையுடைய ‘பீட்ரூட் புலாவ்’ சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி செய்வது? என்பதைத் தெரிந்து கொள்ள நீங்களும் தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword beetroot, பீட்ரூட்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time
Advertisement
40 minutes
Servings 4 People
Calories 216

Equipment

  • 1 கடாய்
  • 1 பிரஷர் குக்கர்
  • 1 மிக்ஸி ஜார்

Ingredients

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 3/4 கப் பீட்ரூட் பொடியாக நறுக்கியது
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 1 tsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1/2 tsp கரம் மசாலா
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 11/2 கப் தண்ணீர்
  • கொத்தமல்லி தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • 2 tsp எண்ணெய்
  • 1/2 tsp நெய்
  • 1/2 இன்ச் பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்

அரைப்பதற்கு

  • 3 சின்ன வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்

Instructions

  • முதலில் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள
    Advertisement
    வேண்டும். அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து எடுக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காய பேஸ்ட் சேர்த்து தீயை குறைத்து பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்க வேண்டும்.பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும்.
  • பொன்னிறமாக வதக்கி, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் பீட்ரூட் மற்றும் பட்டாணி சேர்த்து குறைவான தீயிலேயே 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு தூவி பிரட்டி வேக வைக்க வேண்டும்.
  • அடுத்து அதில் அரிசியைப் போட்டு நன்கு பிரட்டி, பின் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பீட்ரூட் புலாவ் ரெடி!!!

Nutrition

Serving: 500g | Calories: 216kcal | Carbohydrates: 33.2g | Protein: 2.3g | Fat: 0.2g

இதையும் படியுங்கள் : ஹோட்டல் சுவையில் வெஜ் புலாவ் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால்…

5 மணி நேரங்கள் ago

சப்பாத்தி, புலவுடன் சாப்பிட ருசியான மஷ்ரூம் பட்டாணி கறி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர்…

6 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

6 மணி நேரங்கள் ago

பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…

9 மணி நேரங்கள் ago

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

9 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

12 மணி நேரங்கள் ago