- Advertisement -
ஹோட்டல்களில் செய்யப்படும் வெஜ் புலாவ் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் அதே சுவையில் சிலருக்கு செய்ய தெரியாது. இனி அந்த கவலை வேண்டாம் சுலபமாகவும், குறைந்த நேரத்தில் ஹோட்டல் சுவையில் வீட்டிலே செய்து விடலாம்.
இந்த வெஜ் புலாவ் குழந்தைகளுக்கு மத்திய உணவாக செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். ஏனென்றால் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
- Advertisement -
இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற பீட்ரூட் பச்சை பட்டாணி புலாவ் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
-விளம்பரம்-
இந்த வெஜ் புலாவ்வுடன் சிக்கன் கிரேவி, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் செஞ்சி அசத்துங்கள்.
வெஜ் புலாவ் | Veg Pulao Recipe In Tamil
ஹோட்டல்களில் செய்யப்படும் வெஜ் புலாவ் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் அதே சுவையில் சிலருக்கு செய்ய தெரியாது. இனி அந்த கவலை வேண்டாம் சுலபமாகவும், குறைந்த நேரத்தில் ஹோட்டல் சுவையில் வீட்டிலே செய்து விடலாம். இந்த வெஜ் புலாவ் குழந்தைகளுக்கு மத்திய உணவாக செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். ஏனென்றால் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த வெஜ் புலாவ்வுடன் சிக்கன் கிரேவி, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Yield: 4 people
Calories: 216kcal
Equipment
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 300 கிராம் பாசுமதி அரிசி
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- 1 பட்டை
- 5 கிராம்பு
- 3 ஏலக்காய்
- 2 பிரிஞ்சி இலை
- ½ டீஸ்பூன் சீரகம்
- 1 பெரிய வெங்காயம் நீளமாக நறுக்கியது
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 4 பச்சை மிளகாய் கீறியது
- ½ டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மேதி
- 1 கேரட் நறுக்கியது
- 1 உருளை கிழங்கு நறுக்கியது
- 12 பீன்ஸ் நறுக்கியது
- ½ கப் பச்சை பட்டாணி
- கொத்தமல்லி பொடியாக நறுக்கியது கொஞ்சம்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
- பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பிரிஞ்சி இலை, சேர்த்து நன்கு பொரிந்து சிவக்க வேண்டும்.
- பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதாகியது பச்சை மிளகாய் சேர்த்து கஸ்தூரி மேதி சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளை கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
- பிறகு அதில் கொஞ்சம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- வதங்கியதும் ஊறவைத்த அரிசியை சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் காய்கறிகளுடன் கிளறிவிடவும்.
- பிறகு அதில் 3 கப் கொதிக்க வைத்த தண்ணீர் சேர்த்தி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடி போட்டு மிதமான தீயில் 1 விசில் வந்தவுடன் பிரஷர் போனதும் மூடியை திறந்து மெதுவாக கிளறி அதன்மேல் கொத்தமல்லி இலைகளை தூவி விடவும்.
- அவ்வளவு தான் சுட சுட சுவையான வெஜ் புலாவ் தயாராகிவிட்டது.
Nutrition
Serving: 800G | Calories: 216kcal | Carbohydrates: 75g | Protein: 4g | Saturated Fat: 0.5g | Cholesterol: 4mg | Sugar: 0.5g | Iron: 0.2mg