- Advertisement -
சூப்பரான பீட்ரூட் – பச்சை பட்டாணி புலாவ், கஷ்டப்படாம 20 நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். ஹோட்டலில், வெஜிடபிள் புலாவ் என்ற ஒரு டிஷ் கிடைக்கும். காய்கறிகள் போட்டு பாசுமதி அரிசியில், பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் அளவிற்கு மசாலா பொருட்கள் குறைவாக சேர்க்கப்பட்டு,
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான பன்னீர் பட்டாணி புலாவ் இப்படி செஞ்சி பாருங்க!
- Advertisement -
செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் இது. நிறைய பேருக்கு இது ஹோட்டலில் சாப்பிட மிகவும் பிடிக்கும். வீட்டில் முயற்சி செய்தால் அதே சுவையில் வராது. ஹோட்டலில் இன்னும் கூடுதலாக ஆரோக்கிய மான பீட்ரூட் மாற்று பட்டாணி சேர்த்து, அதே சுவையில், தான் இன்று இந்த பீட்ரூட் – பச்சை பட்டாணி புலாவ் ரெசிபி இந்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
பீட்ரூட் பச்சை பட்டாணி புலாவ் | Beetroot Pachai Pattani Pulo Recipe in Tamil
ஹோட்டலில், வெஜிடபிள் புலாவ் என்ற ஒரு டிஷ் கிடைக்கும். காய்கறிகள் போட்டு பாசுமதி அரிசியில், பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் அளவிற்கு மசாலா பொருட்கள் குறைவாக சேர்க்கப்பட்டு, செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் இது. நிறைய பேருக்கு இது ஹோட்டலில் சாப்பிட மிகவும் பிடிக்கும். வீட்டில் முயற்சி செய்தால் அதே சுவையில் வராது. ஹோட்டலில் இன்னும் கூடுதலாக ஆரோக்கிய மான பீட்ரூட் மாற்று பட்டாணி சேர்த்து, அதே சுவையில், தான் இன்று இந்த பீட்ரூட் – பச்சை பட்டாணி புலாவ் ரெசிபி இந்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
Calories: 270kcal
Equipment
- 1 குக்கர்
- 1 பெரிய பவுள்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 4 கப் பாஸ்மதி அரிசி
- 100 கிராம் பச்சை பட்டாணி
- 1/4 KG பீட்ரூட் துருவியது
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 2 பட்டை
- 4 இலவங்கம்
- 1 tsp இஞ்சி பூண்டு விழுது
- 3 பச்சை மிளகாய்
- 1 tbsp தயிர்
- 1/2 tbsp மிளகாய் தூள்
- 1/2 tbsp தனியா தூள்
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- 1 tbsp நெய்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க
- 2 tbsp எண்ணெய்
- 1/2 tsp கடுகு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 1 கொத்து கருவேப்பிலை
செய்முறை
- முதலில் நாம் வைத்திருக்கும் பீட்ரூட்டை நன்கு துருவிக் கொள்ளவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அதன் பின் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, 10 நிமிடம் ஊறவைக்கவும். பின் குக்கரில் அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் விடவும்.
- பின் இதனுடன் பட்டை, இலவங்கம், இரண்டையும் சேர்த்து நன்கு தாளித்து பின் நாம் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- பின் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடுங்கள். பின் நாம் துருவிய பீட்ரூட்டை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
- அதன் பின்பு மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து, இந்த 2 நிமிடம் இந்த மசாலா பொருட்களை வதக்கி பின் தயிர் சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
- பிறகு நாம் ஊறவைத்த அரிசி, உப்பு, கொத்தமல்லி தழை, நெய், பச்சை பட்டாணி சேர்த்து சமமான அளவில் கலந்து குக்கரை மூடி, 1 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
- அதன் பின்பு தயார் செய்த கலவையுடன், சாதம் உடையாமல் சமமாக கலந்து விடவும். அவ்வளவுதான் சூட சூட பீட்ரூட் பச்சை பட்டாணி புலாவ் இனிதே தயார்.
Nutrition
Serving: 1200Gram | Calories: 270kcal | Carbohydrates: 62g | Protein: 13g | Fat: 1g | Saturated Fat: 0.2g | Sodium: 1.2mg | Potassium: 31mg | Sugar: 0.5g | Iron: 1.5mg