- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வித்தியாசமான ‘பீட்ரூட் புலாவ்’
பீட்ரூட் வைத்து அட்டகாசமான சுவையில் புலாவ் செய்து பார்த்தால் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த பீட்ரூட் புலாவ் ரொம்பவே வித்தியாசமான சுவையும், ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கிறது.
வெறும் பத்து நிமிடத்தில் சுவையான பீட்ரூட் புலாவ் எளிதாக வீட்டிலேயே செய்து பாருங்கள. வித்தியாசமான சுவையுடைய ‘பீட்ரூட் புலாவ்’ சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி செய்வது? என்பதைத் தெரிந்து கொள்ள நீங்களும் தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
இதையும் படியுங்கள் : ஹோட்டல் சுவையில் வெஜ் புலாவ் இப்படி செஞ்சி பாருங்க!
Ingredients
Method
முதலில் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து எடுக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காய பேஸ்ட் சேர்த்து தீயை குறைத்து பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்க வேண்டும்.பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும்.
பொன்னிறமாக வதக்கி, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் பீட்ரூட் மற்றும் பட்டாணி சேர்த்து குறைவான தீயிலேயே 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு தூவி பிரட்டி வேக வைக்க வேண்டும்.
அடுத்து அதில் அரிசியைப் போட்டு நன்கு பிரட்டி, பின் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பீட்ரூட் புலாவ் ரெடி!!!






