Home சைவம் வீடே மணக்க மணக்க ருசியான பீட்ரூட் ரசம் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்கள்!

வீடே மணக்க மணக்க ருசியான பீட்ரூட் ரசம் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்கள்!

உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? மதிய வேளையில் டக்குன்னு ஒரு குழம்பு செய்ய வேண்டுமானால், பீட்ரூட் ரசம் செய்யலாம். பீட்ரூட் என்று சொன்னதுமே முகத்தை சுருக்கிக்கொண்டு இன்றைக்கு எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் தான் நிறைய பேர். ஏன் பெரியவர்கள் கூட இந்தக் காயைப் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் பிடித்த மாதிரி பீட்ரூட் ரசத்தை நம் வீட்டிலேயே சுவையாக சூப்பராக எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். வாரம் ஒரு முறை உணவில் பீட்ரூட் சேர்த்து வந்தால், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

-விளம்பரம்-

குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், தவறாமல் பீட்ரூட்டை அடிக்கடி சமைத்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். வழக்கத்திற்கு மாறாக நமது உடல் எடையைக் கூடும் போது பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. எனவே தான் எப்படியாவது அதிகரித்த எடையைக் குறைத்துவிட வேண்டும் என்று டயட்டில் இருப்பது, வாக்கிங், ஜாக்கிங் போன்ற விஷயங்களை மேற்கொள்வது போன்ற பல முறைகளை மேற்கொள்கின்றனர். இதோ இந்த வரிசையில் உடல் எடை குறைப்பில் பீட்ரூட் ரசமும் இடம் பெற்றுள்ளது. மற்ற காய்கறிகளை விட பீட்ரூட்டில் குறைந்த அளவு தான் கலோரிகள் உள்ளது. இப்படி உடல் ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் பயனுள்ளதாக உள்ள நிலையில் இன்றைக்கு பீட்ரூட் ரசம் எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

Print
No ratings yet

பீட்ரூட் ரசம் | Beetroot Rasam Recipe In Tamil

உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? மதிய வேளையில் டக்குன்னு ஒரு குழம்பு செய்ய வேண்டுமானால், பீட்ரூட் ரசம் செய்யலாம். பீட்ரூட் என்று சொன்னதுமே முகத்தை சுருக்கிக்கொண்டு இன்றைக்கு எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் தான் நிறைய பேர். ஏன் பெரியவர்கள் கூட இந்தக் காயைப் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் பிடித்த மாதிரி பீட்ரூட் ரசத்தை நம் வீட்டிலேயே சுவையாக சூப்பராக எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். வாரம் ஒரு முறை உணவில் பீட்ரூட் சேர்த்து வந்தால், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Beetroot Rasam
Yield: 4 People
Calories: 58kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 பீட்ரூட்
  • புளி தேவையான அளவு
  • 2 தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 5 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 2 வர ‌மிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து பீட்ரூட் மற்றும் இஞ்சி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் பச்சைமிளகாய் , தக்காளி சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு, சீரகம், மிளகுதூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
  • பின் புளி கரைசலை சேர்த்து அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், நாம் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதித்து நுரைத்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  • ஒரு‌ தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் ரசம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 58kcal | Carbohydrates: 3.1g | Protein: 8.2g | Fat: 0.2g | Sodium: 106mg | Potassium: 42mg | Fiber: 3.8g | Vitamin A: 4IU | Vitamin C: 6.7mg | Calcium: 22mg | Iron: 9.01mg

இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் ஒரு முறை இப்படி வீட்டில் செஞ்சி பாருங்கள்!