எல்லா டிபனுக்கும் ஏற்ற ருசியான பெங்காலி சப்ஜி இப்படி செஞ்சி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

- Advertisement -

எல்லா டிபனுக்கும் ஏத்த மாதிரி பெங்காலி ஸ்டைலில் சப்ஜி பண்ண போறோம். இந்த சப்ஜியை ரொம்பவே ருசியான ஈஸியான சப்ஜி எல்லா டிபனுக்கும் சேர்த்து சாப்பிடலாம். ரொம்ப சுவையான இந்த சப்ஜியை ரொம்பவே ஈசியா வீட்ல செய்திடலாம். பெங்காலி ஸ்டைல்ல இந்த சப்ஜி நம்ம இப்போ பண்ண போறோம். ரொம்பவே சுவையான இந்த பெங்காலி சப்ஜி க வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப ஈஸியா பண்ணிடலாம்.

-விளம்பரம்-

இந்த சப்ஜியை இட்லி, தோசை, பூரி, பொங்கல், சப்பாத்தி எல்லாத்துக்குமே தொட்டு சாப்பிடலாம். இந்த மாதிரி வித்தியாசமா சப்ஜி செய்து கொடுத்தீங்கன்னா குழந்தைகளுக்கு எல்லாம் ரொம்பவே பிடிக்கும். ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்புவதற்கும் இது ரொம்பவே நல்லா இருக்கும். மதியம் வரைக்கும் கேட்டு போயிடுமா அப்படி எல்லாம் யோசிக்கவே வேண்டாம். இந்த சப்ஜி வேலைக்கு போறவங்களுக்கு ஸ்கூலுக்கு போற பசங்களுக்குன்னு எல்லாருக்கும் கொடுக்கலாம் கெட்டுப் போகாது அப்படியே இருக்கும் மதியம் வரைக்கும்.

- Advertisement -

இந்த சுவையான சப்ஜி எல்லாருக்கும் பிடிக்கிறது மட்டும் இல்லாம திரும்பத் திரும்ப செய்ய சொல்லி கேட்கிற அளவுக்கான சுவைல இருக்கும். எப்போதும் பூரிக்கும் சப்பாத்திக்கும் ஒரே மாதிரி சப்ஜி குருமா பண்ணிதரீங்களா? அப்போ நீங்க இந்த மாதிரி வித்தியாசமா பண்ணி கொடுக்கணும்.  இந்த மாதிரி வித்தியாசமா சப்ஜி பண்ணி கொடுக்கும் போது உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க இந்த பெங்காலி சப்ஜி எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

பெங்காலி சப்ஜி | Bengali Sabji Recipe In Tamil

சப்ஜியை இட்லி, தோசை, பூரி, பொங்கல், சப்பாத்திஎல்லாத்துக்குமே தொட்டு சாப்பிடலாம். இந்த மாதிரி வித்தியாசமா சப்ஜி செய்து கொடுத்தீங்கன்னாகுழந்தைகளுக்கு எல்லாம் ரொம்பவே பிடிக்கும். ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்புவதற்கும் இதுரொம்பவே நல்லா இருக்கும். மதியம் வரைக்கும் கேட்டு போயிடுமா அப்படி எல்லாம் யோசிக்கவேவேண்டாம். இந்த சப்ஜி வேலைக்கு போறவங்களுக்கு ஸ்கூலுக்கு போற பசங்களுக்குன்னு எல்லாருக்கும்கொடுக்கலாம் கெட்டுப் போகாது அப்படியே இருக்கும் மதியம் வரைக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: Bangladesh
Keyword: Bengali Sabji
Yield: 4
Calories: 230kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 உருளைக்கிழங்கு
  • 1 கப் கடலைப்பருப்பு
  • 1/2 கப் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் சீரகதூள்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1/2 ஸ்பூன் கறிமசாலா
  • 3 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/2 ஸ்பூன் பெருங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 2 பச்சைமிளகாய்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 துண்டு பட்டை
  • 2 ஏலக்காய்
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 2 ஸ்பூன் நெய்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துஎடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  •  பிறகு அதில் சீரகம், இடித்து வைத்துள்ள இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பின்புசதுரமாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
     
  •  பின்பு அதில் ஊற வைத்து எடுத்துள்ள கடலை பருப்பை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.பின்பு அதில்மஞ்சள் தூள்,சீரகத்தூள், மல்லிதூள், கரமசாலா, கறி மசாலா சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • இறுதியாக பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு இரண்டு இரண்டரைகப் தண்ணீர் சேர்த்து குக்கரில் விசில் போட்டு மூடி விடவும்.நான்கு விசில் வரும் வரைகாத்திருக்கவும் குக்கரில் நான்கு விசில் வந்த பிறகு கடலைப்பருப்பு உருளைக்கிழங்குஎல்லாம் நன்றாக வெந்த  இருக்கும்.
  • அவற்றை ஒன்று இரண்டாக மசித்து கொள்ள வேண்டும்.  பின் தாளிப்பதற்கு சிறியதாக ஒரு பாத்திரத்தில் நெய்சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து அதில்மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குகடலை பருப்பில் சேர்த்து கலந்து விட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான பெங்காலி ஸ்டைல் சப்ஜி தயார்

Nutrition

Serving: 300g | Calories: 230kcal | Carbohydrates: 8g | Protein: 46g | Fat: 12g | Cholesterol: 67mg | Sodium: 37mg | Potassium: 150mg