Home Uncategorized ஒரு தரம் வெற்றிலை ரசம் இப்படி செய்து பாருங்களேன், ருசியாகவும் , ஆரோக்கியமாக இருக்கும்!

ஒரு தரம் வெற்றிலை ரசம் இப்படி செய்து பாருங்களேன், ருசியாகவும் , ஆரோக்கியமாக இருக்கும்!

நம்ம எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறமா செரிமானம் ஆகணும் அப்படிங்கறதுக்காக வெற்றிலை போடுவது வழக்கமா வச்சிருந்தோம். ஆனால் இந்த வழக்கத்துல சில மாறுபாடுகள் ஏற்பட்டு வெற்றிலை போடுவதே தவறு என்ற மாதிரியான ஒரு சித்தரிப்புகள் வர ஆரம்பிச்சுச்சு. ஆனாலும் ஏன் இந்த வெற்றிலை போடுவது அப்படிங்கறது நல்லது அல்ல.

-விளம்பரம்-

வெற்றிலையில் இருக்கிற கால்சியம் நம்ம உடலுக்கு கிடைக்கனும் அப்படிங்கிறதுக்காகத்தான் இந்த வெற்றிலையில் சாப்பிட்டார்கள் முன்னோர்கள். இதில் அளவுக்கு அதிகமான கால்சியம் சத்து இருக்கிறதுனால அது உடலுக்கு ரொம்பவே முக்கியமான ஒரு சத்தா இருக்குது.

காரணம் இது எலும்பு வளர்ச்சிக்கு ரொம்பவே பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வெற்றிலையை சாப்பிடுவதற்கு கொடுப்பாங்க. அந்த மாதிரி இந்த வெற்றிலை நல்ல காரமாக இருக்கிறதால சளி பிரச்சனைக்கும் நல்ல தீர்வை கொடுக்கும். பின் இத்தனை நல்ல சத்துக்களை கொண்டுள்ள வெற்றிலையை தினமும் ஒன்னு எடுத்துக்கிட்டோம்னா அது நீரிழிவு நோய் குறைக்கிறது அப்படின்னு சொல்லப்படுது. நம்மளால டெய்லி இந்த வெற்றிலையை சாப்பிட முடியாது.  வெற்றிலைய ரசம் வைத்து சாப்பிடும்போது நம்மளால அதை எடுத்துக்க முடியும். அப்படி இந்த சுவையான வெற்றிலையை வைத்து எப்படி ஒரு சூப்பரான ரசம் செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கிறோம். இந்த ரசம் நீங்க வச்சு சாப்பிட்டீங்கன்னா உங்களோட சளி பிரச்சனைக்கும் நல்ல தீர்வா இருக்கும். அது மட்டும் இல்லாம உங்களுக்கு தேவையான கால்சியம் நல்லாவே கிடைக்கும். வெற்றிலையை நம்ம மூலிகையாக பயன்படுத்திட்டு வந்துட்டு இருக்கோம். அப்படி இந்த ஒரு வெற்றிலை மூலிகை ரசத்தை எப்படி சுவையா வைக்கிறது அப்படின்னா தெரிஞ்சுக்கலாம்.

Print
5 from 1 vote

வெற்றிலை ரசம் | Betel Rasam Recipe In Tamil

நம்ம எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறமா செரிமானம் ஆகணும் அப்படிங்கறதுக்காக வெற்றிலை போடுவது வழக்கமா வச்சிருந்தோம். ஆனால் இந்த வழக்கத்துல சில மாறுபாடுகள் ஏற்பட்டு வெற்றிலை போடுவதே தவறு என்ற மாதிரியான ஒரு சித்தரிப்புகள் வர ஆரம்பிச்சுச்சு. ஆனாலும் ஏன் இந்த வெற்றிலை போடுவது அப்படிங்கறது நல்லது அல்ல. அப்படி இந்த ஒரு வெற்றிலை மூலிகை ரசத்தை எப்படி சுவையா வைக்கிறது அப்படின்னா தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Betel Leaf Rasam
Yield: 4
Calories: 157kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 வெற்றிலை
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகுதூள்
  • 5 பல் பூண்டு
  • 2 காய்ந்த மிளகாய்
  • பெருங்காயம் சிறிதளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் வெற்றிலையை நன்றாக கழுவி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு தக்காளியும் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு கடாயில் அரைத்து வைத்துள்ள விழுது மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • ரசம் நன்றாக கொதித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் , மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • அதில் இடித்த பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து ரசத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
  • இப்போது ரசத்தில் பெருங்காயத்தூள், கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு இறக்கி பரிமாறினால் சுவையான வெற்றிலை ரசம் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 157kcal | Carbohydrates: 65g | Protein: 1g | Sodium: 2mg | Potassium: 258mg | Fiber: 2g