மதிய உணவுக்கு சுட சுட காராமணி பிரியாணி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

- Advertisement -

பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல. பிரியாணிகளில் பல வகை உண்டு.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : பிரியாணி சுவையில் ருசியான கிராமத்து தக்காளி சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

- Advertisement -

அதில் குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி மற்றும் பன்னீர் பிரியாணி மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது காராமணி பிரியாணி. தட்ட பயறு தமிழ்நாட்டின் சில இடங்களில் காராமணி என்றும் அழைக்கப்படுகிறது. தட்ட பயிரு பிரியாணி என்பது கொங்கு சமையலில் ஒரு பானையில் செய்யப்படும் ஒரு பிரதான செய்முறையாகும்.

Print
5 from 1 vote

காராமணி பிரியாணி | Black Eye Bean Biryani

பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல. பிரியாணிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் பிரியாணி, மற்றும் பன்னீர் பிரியாணி மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது காராமணி பிரியாணி.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian
Keyword: Biriyani
Yield: 4 People
Calories: 112.5kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் சீரக சம்பா அரிசி
  • 1 கப் காராமணி
  • 1 பெரிய
  • 1 தக்காளி

மசாலா அரைப்பதற்கு

  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 5 சின்ன
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் கசகசா

தாளிக்க

  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை
  • உப்பு தேவையானஅளவு
  • 4 டீஸ்பூன் நெய்
  • 1 கைப்பிடி புதினா, கொத்தமல்லி

செய்முறை

  • காராமணியை நன்கு கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் தண்ணீர், உப்பு சேர்த்து மூன்று விசில் வைத்து வேக வைக்கவும்.
  • பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லி, புதினா இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் எடுத்து மிக்ஸியில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • மசாலா நன்கு வதங்கியதும் காராமணி, ஊற வைத்துள்ள சீராக சம்பா அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • கடைசியாக மல்லி, புதினா இலைகளை சேர்த்து, எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து மூடி வைத்து தண்ணீர் வற்றி வரும் வரை மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
  • பின்னர் எடுத்து தோசை தவாவை சூடு செய்து அதன் மேல் வைத்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.
  • பத்து நிமிடங்களில் பிரியாணி தயாராகிவிடும். பின்னர் எடுத்து நறுக்கி வைத்துள்ள மல்லி இலை, புதினா இலை, நெய் தூவி இறக்கவும்.
  • இப்போது மிகவும் சுவையான, சத்தான, ஒரு வித்தியாசமான காராமணி பிரியாணி சுவைக்கத்தயார்.

Nutrition

Serving: 700g | Calories: 112.5kcal | Carbohydrates: 20g | Protein: 7.5g | Fat: 0.4g | Saturated Fat: 0.2g | Fiber: 6.4g | Vitamin C: 1.2mg | Calcium: 35mg | Iron: 2.2mg