ருசியான கருப்பு உளுந்து சுண்டல் இப்படி செய்து பாருங்க! அவசியம் வாரம் ஒரு முறை செய்து பாருங்க!

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, முதியவர்கள் கூட வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த கருப்பு உளுந்து சுண்டல் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறும். இடுப்பு வலி மூட்டு வலி வராமல் இருக்கும்.  கருப்பு உளுந்தை சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.  எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கருப்பு உளுந்தை வைத்து சுண்டல் செய்வது எப்படி தெரிஞ்சுக்கலாம் வாங்க.

-விளம்பரம்-
Print
No ratings yet

கறுப்பு உளுந்து சுண்டல் | Black Urad Dal Sundal In Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, முதியவர்கள் கூட வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த கருப்பு உளுந்து சுண்டல் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறும். இடுப்பு வலி மூட்டு வலி வராமல் இருக்கும்.  கருப்பு உளுந்தை சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.  எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கருப்பு உளுந்தை வைத்து சுண்டல் செய்வது எப்படி தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Snack
Cuisine: Indian, TAMIL
Keyword: sundal
Yield: 4
Calories: 347kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கறுப்பு முழு உளுந்து
  • 2 பச்சை மிளகாய்
  • சிறிய துண்டு இஞ்சி
  • 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • கறிவேப்பில்லை சிறிதளவு
  • எண்ணெய் தேவையானஅளவு
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். உளுந்தை 8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, குக்கரில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  • வாணலியில்எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பில்லை தாளித்து வெந்த உளுந்து, அரைத்த இஞ்சி விழுது, உப்பு சோத்து நன்கு கிளறவும்.
  • பின் பச்சை வாசனை போனதும், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான கறுப்பு உளுந்து சுண்டல் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 347kcal | Carbohydrates: 59.6g | Protein: 24g | Fiber: 25.7g | Calcium: 57mg | Iron: 5.14mg
- Advertisement -