தோசையில் பல வகைகள் இருக்கு மசாலா தோசை வெங்காய தோசை முட்டை தோசை காளான் தோசை சாக்லேட் தோசை அப்படின்னு நிறைய தோசை வகைகள் அடுக்கி கிட்டே போகலாம். அந்த வகையில சிறுதானியங்கள் வச்சு செய்யக் கூடிய தோசைகளும் இருக்கு. அது உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது கம்பு கேழ்வரகு திணை கருப்பு கவுனி சிவப்பரிசி அப்படின்னு எல்லாத்துலயுமே சூப்பரான தோசை செஞ்சு சாப்பிடலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான காய்கறி வச்சு செய்யக்கூடிய சுரைக்காய் தோசை செய்ய போறோம்.
சுரைக்காய் இல்ல நிறைய தண்ணீர் சத்துக்கள் இருக்கிறதுனால இதுல தோசை செஞ்சு சாப்பிடும் போது நம்ம உடம்புக்கு தேவையான நீர் சத்துக்கள் கிடைக்கும். உடம்பு ரொம்ப வறட்சியா இருந்துச்சுன்னா சுரைக்காய சமைச்சு சாப்பிடலாம் அப்படி சுரைக்காய் பொரியல் கூட்டு பிடிக்காதவங்க இந்த மாதிரி தோசை செஞ்சும் சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். இதுல இஞ்சி பச்சை மிளகாய், சீரகம் எல்லாமே சேர்த்து செய்றதால சுரைக்காய் ஓட வாசனை அதிகமாக தெரியாது. இதுக்கு நம்ம மிக்ஸியில் தான் மாவரைக்க போறோம்.
மேலும் இந்த மாவை அரைச்சு புளிக்க வச்ச தோசை ஊத்தணும் அப்படின்ற அவசியம் இல்ல தோசை மாவு அரைச்சு உடனே நம்ம தோசை ஊத்திக்கலாம் டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான சுரைக்காய் தோசையை ஒரு தடவ மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பாக வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிட வாங்க இதுக்கு உங்களுக்கு பிடிச்ச மாதிரி தேங்காய் சட்னி தக்காளி சட்னி, சாம்பார் இந்த மாதிரி எது வேணும்னாலும் வெச்சு சாப்பிடலாம். கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவையான சுரைக்காய் தோசைய சாப்பிடும் போது உடல் சூடு கூட தணிஞ்சு உடல் குளிர்ச்சி அடையும்.
சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் அடிமைதான் ஆவாங்க. என்னதான் இது எல்லாருக்கும் ரொம்ப புடிச்ச ரெசிபியா இல்லனாலும் ரொம்ப ஆரோக்கியமான ரெசிப்பி அதுக்காகவே இதை சாப்பிட சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போயிடும். கண்டிப்பா இது ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க சுரைக்காய் நிறைய வீட்டில் இருந்துச்சுன்னா கண்டிப்பா சுரைக்காய் கூட்டு பொரியல்னே செய்யாமல் இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா சுரைக்காய் தோசையும் செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான சுரைக்காய் தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
சுரைக்காய் தோசை | Bottle Gourd Dosa Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1 கப் அரிசி
- 2 டேபிள் ஸ்பூன் பச்சரிசி
- 1/2 கப் உளுந்து
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- 1 சுரைக்காய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 3 பச்சை மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- 1 துண்டு இஞ்சி
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- அரிசி பச்சரிசி வெந்தயம் உளுந்து அனைத்தையும் 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சுரைக்காயை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
- சீரகம் பச்சை மிளகாய் இஞ்சி உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- தோசை கல்லில் தோசை ஊற்றி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சுவையான சுரைக்காய் தோசை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சுரைக்காய் ஆட்டு குடல் கறி குழம்பு ருசியாக சுலபமாக இப்படி கூட செய்யலாம்!