Home சைவம் சுரைக்காயை வைத்து மொறு மொறுனு சுரைக்காய் கபாப் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி...

சுரைக்காயை வைத்து மொறு மொறுனு சுரைக்காய் கபாப் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசிதான்!

இதுவரை நீங்கள் சுவைத்திடாத ‘சுரைக்காய் கபாப்’! இ புதுவிதமாக, மிக மிக சுலபமாக செய்யலாம். இதுவரைக்கும் நாம டேஸ்ட் பண்ணாத ஒரு சுரைக்காய் கபாப் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சுரைக்காய் சேர்த்து தான் இந்த கபாப் தயார் செய்யப் போகின்றோம். சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது.இது உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது

-விளம்பரம்-

சுரைக்காயை வைத்து நம்முடைய வீடுகளில் எப்போதும் கூட்டு அல்லது குழம்பு தான் வைப்போம்.  கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுரைக்காய் கபாப் என்று சொல்லப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீர் கட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இந்த சுரைக்காய்.

சுரைக்காய் கபாப் நாவிற்கு மிக மிக சுவை தரக் கூடியது. சுரைக்காய் கபாப் நிறைய எண்ணெய் கூட ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்லட் செய்வது போல் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, இந்த சுரைக்காய் கபாப் சில நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.

Print
5 from 1 vote

சுரைக்காய் கபாப் | Bottle Gourd Kabab Recipe In Tamil

சுரைக்காயை வைத்து நம்முடைய வீடுகளில் எப்போதும்கூட்டு அல்லது குழம்பு தான் வைப்போம்.  கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுரைக்காய் கபாப் என்று சொல்லப்படும்இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். நீர் கட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இந்த சுரைக்காய். சுரைக்காய் கபாப் , கட்லட் செய்வது போல் கடாயில் சிறிது எண்ணெய்ஊற்றி, இந்த சுரைக்காய் கபாப் சில நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Bottle Gourd Kabab
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் சுரைக்காய் துருவியது
  • 1 வெங்காயம்
  • 3 தேக்கரண்டி அரிசி மாவு
  • 2 தேக்கரண்டி சோள மாவு
  • 3 தேக்கரண்டி ப்ரட் க்ரம்ஸ்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி சோம்புதூள்
  • 1/4 தேக்கரண்டி சோயாசாஸ்
  • மல்லிதழை சிறிதளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை

  • சுரைக்காயை துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை இவைகளை கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  • துருவிய சுரைக்காயை ஒரு நாண்ஸ்டிக் கடாயில் போட்டு அடுப்பில் வைத்து தண்ணீர் சுண்ட வதக்கி கொள்ளவும்.
  • சுரைக்காய் வதங்கியதும் எடுத்து விட்டு அதே வாணலியில் நறுக்கின வெங்காயம், மல்லி, கறிவேப்பிலையை போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் வதக்கிய பொருட்களுடன் எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு பிசையவும்.
  • வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி அதில் போட்டு பொரித்து எடுக்கவும். உருண்டைகளாக அல்லாமல் நீளவாக்கிலும் போட்டு பொரித்தெடுக்கலாம்.
  • கெட் செப்புடன் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் சிறிது பனீரும் துருவி சேர்த்துக் கொள்ளலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg