அசத்தலான சுரைக்காய் பொரியல் இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க, இனி அடிக்கடி சுரைக்காய் வாங்க ஆரம்பிச்சுடுவீங்க!!!

- Advertisement -

காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் சுரைக்காயும் ஒன்று! இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது. சுரைக்காய் நீர்க்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அசத்தலான சுரைக்காய் பொரியல் இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க! எப்போதும் ஒரே வகையான காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமைப்பவர்கள் ஏராளமானோர் நம் நாட்டில் உண்டு.

-விளம்பரம்-

அவர்கள் ஆரம்பத்தில் என்ன கற்றுக் கொண்டார்களோ, அந்த காய்கறிகளை மட்டும் வைத்து சமையலை முடித்து விடுவார்கள். ஆனால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய காய்கறிகளில் ஒன்றாக இருக்கும் இந்த சுரைக்காயை பெரும்பாலானோர் பயன்படுத்துவது கிடையாது, இதில் இருக்கும் சத்துக்கள் என்னவோ ஏராளம்! சுரைக்காய் பொரியல் ரொம்பவே சுலபமாக டேஸ்டியாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்

- Advertisement -
Print
No ratings yet

சுரைக்காய் பொரியல் | Bottle Gourd Poriyal Recipe In Tamil

எப்போதும் ஒரே வகையான காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமைப்பவர்கள் ஏராளமானோர் நம் நாட்டில் உண்டு. அவர்கள் ஆரம்பத்தில் என்ன கற்றுக் கொண்டார்களோ, அந்த காய்கறிகளை மட்டும் வைத்து சமையலை முடித்து விடுவார்கள். ஆனால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய காய்கறிகளில் ஒன்றாக இருக்கும் இந்த சுரைக்காயை பெரும்பாலானோர் பயன்படுத்துவது கிடையாது, இதில் இருக்கும் சத்துக்கள் என்னவோ ஏராளம்! சுரைக்காய் பொரியல் ரொம்பவே சுலபமாக டேஸ்டியாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Bottle Gourd Poriyal
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 சுரைக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1 ஸ்பூன் கடலை பருப்பு
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி வறுத்த வேர்க்கடலை
  • 3 வரமிளகாய்
  • 4 பல் பூண்டு

செய்முறை

  • சுரைக்காய் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதன் மேல் தோலை நீக்கிவிட்டு, உள்ளே விதைகள் கடினமாக இருந்தால் நீக்கி விடுங்கள், இல்லை என்றால் அப்படியே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
  • பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி அளவிற்கு நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.
  • பின் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்த வேர்க்கடலை ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் இதனுடன் காரத்திற்கு மூன்று வர மிளகாய் மற்றும்நான்கு பூண்டு பற்களை தோல் உரித்து சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.
  • கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து மற்றும் கடலை பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு தாளித்து, வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதம் வர வதக்கி விடவேண்டும்.
  • பொன்னிறமாக வெங்காயம் வதங்கி வரும் பொழுது நீங்கள் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி விட வேண்டும்.
  • பிறகு தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து ரெண்டு நிமிடம் வதக்கி மூடி வைத்து விடுங்கள்.
  • சுரைக்காய் நீர் காய் என்பதால் மூடி வைத்தாலே போதும் தண்ணீர் தெளிக்க தேவையில்லை அதுவே தண்ணீர் விடும். எட்டில் இருந்து பத்து நிமிடத்திற்குள் சுரைக்காய் நன்கு வெந்துவிடும்.
  • அதன் பிறகு நீங்கள் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பவுடரை சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாசம் போக நன்கு வதக்கி விடுங்கள். பிறகு நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கி சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Fat: 0.33g | Sodium: 126mg | Potassium: 305mg | Calcium: 3.1mg | Iron: 0.26mg