தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். அதுமட்டுமின்றி தோசை உடல் பருமனை அதிகரிக்கும் பொருட்களையோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருட்களையோ கொண்டவை அல்ல. மேலும் இவை எளிமையான மற்றும் எளிதாக செய்து முடிக்க கூடிய ஒரு உணவு வகை.
தோசையில் பல வகை உண்டு அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகுந்த சுவையான மற்றும் வித்தியாசமான குடைமிளகாய் மசாலா தோசை. காலையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தோசை சுடலாம் என்று நினைத்தால் தோசை மாவு இல்லையா? அப்படியானால் கவலையை விடுங்கள். வீட்டில் குடைமிளகாய் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தோசை செய்யலாம். இதுவரை குடைமிளகாய் கொண்டு கூட்டு, சம்பார் தான் செய்திருப்பீர்கள். அடுத்த முறை குடைமிளகாய் வெச்சு சமைப்பதாக இருந்தால், குடைமிளகாய் மசாலா தோசை செய்யுங்கள்.
குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது. குடைமிளகாய் பொரியலை தனியாக சமைத்து கொடுத்தால் பலரும் விருப்பமாக உண்பதில்லை. ஆனால் இங்கு குடைமிளகாயை மசாலா போன்று செய்து, அதன் பின் அதனை தோசையுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
கேப்ஸிகம் மசாலா தோசை | Capsicum Masala Dosa Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 2 குடைமிளகாய்
- 2 கப் தோசை மாவு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 2 வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் பின்பு குடைமிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- பின் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி கொத்தமல்லி இலை மற்றும் வெங்காயத்தாள் தூவி அடுப்பை அணைத்து விடவும்.
- பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை சேர்த்து தோசையாக வார்த்து குடைமிளகாய் மசாலாவை நடுவில் வைத்து சுற்றி எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான குடைமிளகாய் மசாலா தோசை தயார். இதற்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!