Advertisement
சைவம்

பிரெட் துண்டுகளை வைத்து வீடே கமகமக்கும் தோசை சூடுவது எப்படி ?

Advertisement

வீட்டில் எப்போதும் வழக்கம் போல தோசை சுடாமல் வித்தியாசமான முறையில் தோசை சுட்டு சாப்பிட நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த பிரெட் தோசையே முயற்சி செய்து பார்க்கலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்கள் பிடித்த ஒரு உணவாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : பேப்பர் போன்று கம்பு தோசை செய்வது எப்படி ?

Advertisement

வீட்டில் தோசை சுட மாவு இல்லை இது போன்ற அவசர காலத்தில் உங்கள் வீட்டில் பிரெட்டு துண்டுகள் இருந்தால் கண்டிப்பாக இது உதவியாக இருக்கும். இன்று இந்த பிரெட் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

பிரெட் தோசை | Bread Dosa Recipe in Tamil

Print Recipe
வீட்டில் எப்போதும் வழக்கம் போல தோசை சுடாமல் வித்தியாசமான முறையில் தோசை சுட்டு சாப்பிட நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த பிரெட் தோசையே முயற்சி செய்து பார்க்கலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்கள் பிடித்த ஒரு உணவாக இருக்கும். வீட்டில் தோசை சுட மாவு இல்லை இது போன்ற அவசர காலத்தில் உங்கள் வீட்டில் பிரெட்டு துண்டுகள் இருந்தால் கண்டிப்பாக இது உதவியாக இருக்கும். இன்று இந்த பிரெட் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Bread dosa, பிரெட் தோசை
Advertisement
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 265

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 தோசை கல்

Ingredients

  • 5 துண்டு பிரெட்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 3 tbsp கோதுமை மாவு 
  • 3 tbsp ரவை
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  • 1 கேரட் துருவி கொள்ளவும்
  • 1 தக்காளி பொடியாக நறுக்கவும்
  • 3 tbsp தயிர்
  • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்

Instructions

  • முதலில் எடுத்த பிரட் துண்டுகளை சிறிய சிறிய துண்டுகளாக
    Advertisement
    வெட்டி கொள்ளுங்கள். வெட்டி கொண்ட பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு அரைத்த பிரெட் மாவை ஒரு பெரிய பவுளில் எடுத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ரவை, கோதுமை மாவு இரண்டும் சேர்ந்து கலந்து கொள்ளுங்கள்.
  • பின் நம் வைத்துள்ள தயிர், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, துருவிய கேரட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் இதோடு மிளகாய் தூளும் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  • இப்போது இந்த மாவை தோசை ஊற்று பதத்திற்கு ஏற்றதாக மாற்ற தேவையான தண்ணீர் ஊற்றி கொண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு தோசை ஊற்று பதத்திற்கு மாவு வந்தவுடன் கல்லை அடுப்பில் வைத்து. தோசை கல் சூடேறியவுடன் மாவை விரித்து ஊற்றாமல் அடை போல ஊற்றி போற்றிக் கொள்ளுங்கள்.
  • பின் தேவையான அளவு எண்ணெய் சொட்டுகளை தோசையில் விட்டு எடுங்கள் தோசை பொன்னிறமாக வந்தவுடன் திருப்பி போட்டு விடுங்கள்.
  • தோசை மறுபக்கமும் பொன்னிறமாக வந்துவிட்டால் தோசை வெந்து விட்டது மீதி இருக்கும் மாவையும் இப்படியே சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் எளிமையான பிரெட் தோசை இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4person | Calories: 265kcal | Carbohydrates: 49g | Protein: 9g | Saturated Fat: 0.7g | Sodium: 491mg | Potassium: 115mg | Sugar: 5g
Advertisement
Prem Kumar

Recent Posts

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

12 நிமிடங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

33 நிமிடங்கள் ago

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

1 மணி நேரம் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

3 மணி நேரங்கள் ago

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 06 மே 2024!

மேஷம் கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன் கேட்பவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை அறிந்திடுங்கள். உங்களின்…

6 மணி நேரங்கள் ago