- Advertisement -
வீட்டில் எப்போதும் வழக்கம் போல தோசை சுடாமல் வித்தியாசமான முறையில் தோசை சுட்டு சாப்பிட நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த பிரெட் தோசையே முயற்சி செய்து பார்க்கலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்கள் பிடித்த ஒரு உணவாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : பேப்பர் போன்று கம்பு தோசை செய்வது எப்படி ?
- Advertisement -
வீட்டில் தோசை சுட மாவு இல்லை இது போன்ற அவசர காலத்தில் உங்கள் வீட்டில் பிரெட்டு துண்டுகள் இருந்தால் கண்டிப்பாக இது உதவியாக இருக்கும். இன்று இந்த பிரெட் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.
-விளம்பரம்-
பிரெட் தோசை | Bread Dosa Recipe in Tamil
வீட்டில் எப்போதும் வழக்கம் போல தோசை சுடாமல் வித்தியாசமான முறையில் தோசை சுட்டு சாப்பிட நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த பிரெட் தோசையே முயற்சி செய்து பார்க்கலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்கள் பிடித்த ஒரு உணவாக இருக்கும். வீட்டில் தோசை சுட மாவு இல்லை இது போன்ற அவசர காலத்தில் உங்கள் வீட்டில் பிரெட்டு துண்டுகள் இருந்தால் கண்டிப்பாக இது உதவியாக இருக்கும். இன்று இந்த பிரெட் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.
Yield: 4 people
Calories: 265kcal
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 5 துண்டு பிரெட்
- எண்ணெய் தேவையான அளவு
- 3 tbsp கோதுமை மாவு
- 3 tbsp ரவை
- 1 tbsp மிளகாய் தூள்
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கவும்
- 1 கேரட் துருவி கொள்ளவும்
- 1 தக்காளி பொடியாக நறுக்கவும்
- 3 tbsp தயிர்
- 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்
செய்முறை
- முதலில் எடுத்த பிரட் துண்டுகளை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள். வெட்டி கொண்ட பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு அரைத்த பிரெட் மாவை ஒரு பெரிய பவுளில் எடுத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ரவை, கோதுமை மாவு இரண்டும் சேர்ந்து கலந்து கொள்ளுங்கள்.
- பின் நம் வைத்துள்ள தயிர், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, துருவிய கேரட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் இதோடு மிளகாய் தூளும் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
- இப்போது இந்த மாவை தோசை ஊற்று பதத்திற்கு ஏற்றதாக மாற்ற தேவையான தண்ணீர் ஊற்றி கொண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
- பின்பு தோசை ஊற்று பதத்திற்கு மாவு வந்தவுடன் கல்லை அடுப்பில் வைத்து. தோசை கல் சூடேறியவுடன் மாவை விரித்து ஊற்றாமல் அடை போல ஊற்றி போற்றிக் கொள்ளுங்கள்.
- பின் தேவையான அளவு எண்ணெய் சொட்டுகளை தோசையில் விட்டு எடுங்கள் தோசை பொன்னிறமாக வந்தவுடன் திருப்பி போட்டு விடுங்கள்.
- தோசை மறுபக்கமும் பொன்னிறமாக வந்துவிட்டால் தோசை வெந்து விட்டது மீதி இருக்கும் மாவையும் இப்படியே சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் எளிமையான பிரெட் தோசை இனிதே தயாராகிவிட்டது.
Nutrition
Serving: 4person | Calories: 265kcal | Carbohydrates: 49g | Protein: 9g | Saturated Fat: 0.7g | Sodium: 491mg | Potassium: 115mg | Sugar: 5g