Home சைவம் ரொம்ப ரொம்ப ஈஸியா சுவையா கத்தரிக்காய் சட்னி, இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட புதுவிதமான சட்னி...

ரொம்ப ரொம்ப ஈஸியா சுவையா கத்தரிக்காய் சட்னி, இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட புதுவிதமான சட்னி ரெசிபி!!!

பொதுவாக நாம் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி, வெங்காயம் சட்னி, பூண்டு சட்னி, கார சட்னி சாம்பார் புதினா சட்னி மல்லி சட்னி என பலவகையான சட்னிகளை வைத்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் வித்யாசமாக கத்தரிக்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம். இந்த கத்திரிக்காய் சட்னியை இட்லி தோசைக்கு மட்டுமில்லாமல் சாதத்திற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.

-விளம்பரம்-

பொதுவாக பலருக்கு கத்திரிக்காய் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் கத்திரிக்காயிலும் பல வகையான சத்துக்கள் உள்ளது. அந்த சத்துக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் சென்றடைய நாம் கொஞ்சம் வித்தியாசமாக அந்த கத்திரிக்காயை வைத்து ஏதாவது செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிட வாய்ப்புள்ளது. இந்த கத்திரிக்காய் சட்னியும் அப்படித்தான். சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

இரண்டு இட்லி இரண்டு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இன்னும் இரண்டு அதிகமாகவே சாப்பிடலாம் அந்த அளவிற்கு இதனுடைய சுவை இருக்கும். மிகவும் குறைவான நேரத்தில் சுலபமாக சுவையாக இந்த கத்திரிக்காய் சட்னியை நாம் செய்து முடித்து விடலாம். எப்பொழுதுமே ஒரே மாதிரியான சட்னி வகைகளை சாப்பிட்டு சலித்து போயிருந்தால் இந்த சட்னியை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். வாங்க இந்த அட்டகாசமான கத்திரிக்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
1.67 from 3 votes

கத்தரிக்காய் சட்னி | Brinjal Chutney Recipe In Tamil

பொதுவாகபலருக்கு கத்திரிக்காய் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் கத்திரிக்காயிலும் பல வகையான சத்துக்கள்உள்ளது. அந்த சத்துக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் சென்றடைய நாம் கொஞ்சம் வித்தியாசமாக அந்த கத்திரிக்காயை வைத்து ஏதாவது செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிட வாய்ப்புள்ளது. இந்த கத்திரிக்காய் சட்னியும் அப்படித்தான். சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: chutney
Cuisine: tamil nadu
Keyword: brinjal chutney
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 3 கத்தரிக்காய்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 புளி எலுமிச்சை அளவு
  • 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
  • கடலை எண்ணெய் தேவையான அளவு
  • விளக்கெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கத்திரிக்காய்களை கழுவி சுத்தம் செய்த பின்பு ஒரு துணியால் துடைத்து விட்டு அதன் மேல் விளக்கெண்ணையை தடவி அடுப்பில் சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • சூடு ஆறியவுடன் கத்தரிக்காய் தோலை உரித்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு மசித்து வைத்துள்ள கத்தரிக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • பின்பு புளியை கரைத்து சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான கத்தரிக்காய் சட்னி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Fat: 2g | Sugar: 1g