Home சைவம் ருசியான செட்டிநாடு கத்திரிக்காய் கோஸ் மல்லி, . கத்திரிக்காய் சாப்பிடாதவர்கள் கூட ருசித்து சாப்பிடுவார்கள்.

ருசியான செட்டிநாடு கத்திரிக்காய் கோஸ் மல்லி, . கத்திரிக்காய் சாப்பிடாதவர்கள் கூட ருசித்து சாப்பிடுவார்கள்.

இன்னைக்கு சுவையான கத்திரிக்காய் கோஸ் மல்லி எப்படி பண்ண போறோம் அப்படின்னு பார்க்க போறோம். கத்திரிக்காயில் இருக்கிற புரதசத்து இரும்பு சத்து உடலுக்கு நல்ல சக்திய கொடுக்குது ரொம்பவே சுவையா எல்லாருக்கும் புடிச்ச மாதிரி இருக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் சாப்பிடலாம். வித்தியாசமான சுவைல நிறைய வகையில உணவுகள் செட்டிநாடு ஸ்டௌலில் கிடைக்கும்.

-விளம்பரம்-

அப்படி இந்த செட்டிநாடு ஸ்டைலில் நம்ம கத்திரிக்காய் கோஸ் மல்லி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். இந்த கத்தரிக்காய் கோஸ் மல்லி அனைத்து சாதத்தோடும் இட்லி தோசைக்கு சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். ரொம்பவே சுலபமா வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து இந்த கத்திரிக்காய் கோஸ் மல்லி எப்படி வீட்ல செய்ய போறோம் அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம்.

கத்திரிக்காய் உணவுகள் அப்படிங்கும் போது அவை ரொம்பவே சுவையான உணவுகள் மட்டும் கிடையாது அதுல நிறைய சத்தேக்களும் இருக்கிறது. அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கத்திரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல பல ஊட்டச்சத்து கிடைக்கும். என்னதான் கத்திரிக்காயில் வறுவல்,  சாம்பார், புளி குழம்பு, கூட்டு , எண்ணெய் கத்திரிக்கா அப்படின்னு செஞ்சாலும் இந்த கத்திரிக்காய் கோஸ் மல்லி ரொம்பவே சுவையாவும் வித்தியாசமாகவும் இருக்கும். வாங்க இந்த கத்திரிக்காய் கோஸ் மல்லி எப்படி ருசியா செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

கத்திரிக்காய் கோஸ் மல்லி | Brinjal Kose Malli In Tamil

கத்திரிக்காய் உணவுகள் அப்படிங்கும் போது அவை ரொம்பவே சுவையான உணவுகள் மட்டும் கிடையாது அதுல நிறைய சத்தேக்களும் இருக்கிறது. அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கத்திரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல பல ஊட்டச்சத்து கிடைக்கும்.என்னதான் கத்திரிக்காயில் வறுவல்,  சாம்பார், புளி குழம்பு, கூட்டு , எண்ணெய் கத்திரிக்கா அப்படின்னு செஞ்சாலும் இந்த கத்திரிக்காய் கோஸ் மல்லி ரொம்பவே சுவையாவும் வித்தியாசமாகவும் இருக்கும். வாங்க இந்த கத்திரிக்காய் கோஸ் மல்லி எப்படி ருசியா செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Brinjal Kose Malli
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ கத்திரிக்காய்
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 4 பச்சைமிளகாய்
  • 2 ஸ்பூன் பாசிப்பருப்பு
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 12 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 12 ஸ்பூன் பெருங்காயதூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கத்திரிக்காயை கழுவி விட்டு முழுதாக குக்கரில் சேர்த்து தக்காளி, பாசிப்பருப்புடன் வேக வைக்கவும்.பிறகு கத்தரிக்காய் வெந்த பிறகு எடுத்து அதனுடைய மேல் தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும்.
  •  பிறகு ஒரு பாத்திரத்தில் தோல் உரித்து வைத்துள்ள கத்திரிக்காய், தக்காளி , பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம்  பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு அதில் மிளகாய் தூள் ,பெருங்காய தூள் சேர்த்து நன்றாக  வதக்கிவிட வேண்டும். பின்பு மசித்து வைத்துள்ள கத்திரிக்காய், பாசிப்பருப்பு, தக்காளி கலவையை அதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  •  புளியை ஊறவைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் உள்ள மசித்த கத்திரிக்காய் வெந்து கொதி வந்த பிறகு அதில் புளி கரைசல் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • புளிக்கரைசல் சேர்த்த பிறகு நன்றாக கொதித்து கெட்டியாக வந்த பிறகு அதில் கொத்தமல்லி தலை தூவி இறக்கினால் செட்டிநாடு ஸ்டைல் கத்திரிக்காய் கோஸ் மல்லி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 1.2g | Fat: 2g | Sugar: 2g