நாவில் எச்சி ஊற வைக்கும் கத்தரிக்காய் மிளகு கறி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றால் அதிகம் பிடித்தமான காய்கறியாக இருக்கும். ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றாலே அலர்ஜியாக இருக்கும். கத்தரிக்காயை ஒருவிதமான ஒவ்வாமை உடையவர்கள் சாப்பிட்டால் நமச்சல் ஏற்படும் என்று தவிர்த்து விடுவார்கள். ஆனால் கத்தரிக்காய் பிரியர்களுக்கு எவ்வளவு செய்து கொடுத்தாலும் பத்தவே பத்தாது. அத்தகையவர்களுக்கு இந்த கத்தரிக்காய் மிளகு கறி ஒரு முறை  செய்து கொடுத்துப் பாருங்கள்! உங்களை பாராட்டி தள்ளி விடுவார்கள்.

-விளம்பரம்-

காய்கறி என்றாலே பலரும் மருந்து சாப்பிடுவது போன்று தான் சாப்பிடுவார்கள். இதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது. அதிலும் ஒரு சில காய்கறிகளை சுத்தமாக எடுத்துக் கொள்வதே கிடையாது. அவ்வாறு கத்தரிக்காய், பாகற்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகளை பலரும் வேண்டாம் என்று தான் நினைக்கிறார்கள். வீட்டில் இவற்றை வாங்கி சமைப்பதையே தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இவ்வாறு காய்கறிகளை சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பது நமக்கு தான் கெடுதல் விளைவிக்கிறது. ஏனென்றால் காய்கறிகளில் மட்டும் தான் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இவற்றை சிறிதளவாவது அன்றாடம் நமது உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். பலரும் விரும்பி சாப்பிடாத இந்த கத்தரிக்காயை ஒருமுறை இவ்வாறு கத்தரிக்காய் மிளகு கறி செய்தால் போதும். வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட தட்டாமல் சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்..

- Advertisement -
Print
2.34 from 3 votes

கத்தரிக்காய் மிளகு கறி | Brinjal Pepper Fry Recipe In Tamil

ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றால் அதிகம் பிடித்தமான காய்கறியாக இருக்கும். ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றாலே அலர்ஜியாக இருக்கும்.கத்தரிக்காயை ஒருவிதமான ஒவ்வாமை உடையவர்கள் சாப்பிட்டால் நமச்சல் ஏற்படும் என்று தவிர்த்துவிடுவார்கள். ஆனால் கத்தரிக்காய் பிரியர்களுக்கு எவ்வளவு செய்து கொடுத்தாலும் பத்தவேபத்தாது. அத்தகையவர்களுக்கு இந்த கத்தரிக்காய் மிளகு கறி ஒரு முறை  செய்து கொடுத்துப் பாருங்கள்! உங்களை பாராட்டி தள்ளிவிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைஇந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்..
 
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Brinjal Pepper Fry
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் கத்தரிக்காய் நறுக்கியது
  • 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • உப்பு தேவைகேற்ப
  • 2 பல் பூண்டு
  • மஞ்சள்தூள் சிறிதளவு
  • 1/2 டம்ளர் தேங்காய்பால்
  • கறிவேப்பிலை சிறிதளவு

அரைக்க

  • 3 பல் பூண்டு
  • 1 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்

செய்முறை

  • முதலில் அரைக்க கொடுத்துள்ள அனைத்தையும் விழுதாக அரைத்து கொள்ளவும்
  • கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், பூண்டு, கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பின்,அரைத்த விழுது சேர்த்து கிளறி சிம்மில் வைத்து எட்டு நிமிடங்களுக்கு நன்றாக வேகவிடவும்
  • பிறகு தேங்காய் பால் சேர்த்து மூன்று நிமிடம் கழித்து கிரேவி பதம் வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Protein: 9g | Cholesterol: 1.2mg | Fiber: 2g | Sugar: 1g