அருமையான ருசியில் கத்தரிக்காய் ரசவாங்கி குழம்பு எளிமையா இப்படி செய்து பாருங்க!

மதிய வேளையில் சாதத்திற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ரசவாங்கி செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் ரசவாங்கி சாதத்துடன் சேர்த

By Prem Kumar · 9/4/2024

மதிய வேளையில் சாதத்திற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ரசவாங்கி செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் ரசவாங்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். கத்தரிக்காய் பொட்டாசியம் , விட்டமின் சி, இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துதல் என உடலுக்குப் பல நன்மைகள் தரக்கூடியது. முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை கொண்டது கத்தரிக்காய்கள்.

வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதனால் கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. எனவே வாரம் ஒரு முறை கத்தரிக்காய் உட்கொள்வது மிகவும் நல்லது. இன்னும் பல வகையான நன்மைகளை தரும் கத்திரிக்காயை வைத்து சூப்பரான கத்திரிக்காய் ரசவாங்கி வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். வெள்ளை சோறுக்கு இந்த தஞ்சாவூர் ஸ்டைல் கத்தரிக்காய் ரசவாங்கி மிகவும் சுவையாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : ருசியான கர்நாடகா கத்தரிக்காய் சாதம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி கூட!

Recipes AMP · Quick view
View full