ருசியான கர்நாடகா கத்தரிக்காய் சாதம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி கூட!

- Advertisement -

கத்திரிக்காயை வைத்தது ஒரு வெரைட்டி ரைஸ் ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கர்நாடகாவில் இதை வாங்கி பாத் என்று சொல்லுவார்கள். எத்தனை நாளைக்குத்தான் குழம்பு ரசம் என்று செய்வது. இது போல ஒரே மாதிரியாக செய்து கொடுத்தால் செய்கிறவர்களுக்கு சரி. சாப்பிடுபவர்களுக்கும் சரி போர் அடித்து விடும். ஒருநாள் வித்தியாசமாக கத்தரிக்காயை வைத்து இந்த வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிட்டு தான் பார்ப்போமே. கத்திரிக்காய் சாதம் கர்நாடகத்தின் பாரம்பரிய உணவாகும். கர்நாடகா மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் தமிழ்நாட்டிலும் இது விரும்பி உண்ணப்படுகிறது. வாங்கிபாத் கத்தரிக்காய் பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகையாகும். கத்தரிக்காய் சாதம், மசாலாவுடன் ஊற வைத்த அரிசி மற்றும் கத்தரிக்காய் சேர்த்து பிரஷர் குக்கரில் தயாரிக்கலாம். இதன் சுவையும், மணமும் ஒருமுறை சாப்பிட்டால் உங்கள் நாவைவிட்டு நீங்காது.

-விளம்பரம்-

இது லஞ்ச் பாக்ஸ்க்கு சிறந்தது. தக்காளி சாதம், பிரிஞ்சி சாதம், தேங்காய் சாதம், பிரியாணி போன்ற உணவு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும். இவற்றை அடிக்கடி நமது வீடுகளில் செய்திருப்போம். ஆனால் முதல்முறையாக கத்தரிக்காயை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த கத்தரிக்காய் சாதம் இவ்வாறு செய்து பாருங்கள். இதன் சுவை சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். கத்தரியில் காணப்படும் போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கவும் உதவுகின்றன. இப்படி நிறை ஆரோக்கிய பயன்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள கத்திரியில் எப்படி சாதம் தயார் செய்யலாம் என இங்கு பார்க்கலாம். கத்தரிக்காய் சாதம் விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான சாதம் இதனை தயிர் பச்சடி அல்லது உருளைக்கிழங்கு பொடிமாஸ் உடன் பரிமாறலாம்.

- Advertisement -
Print
4 from 2 votes

கர்நாடகா கத்தரிக்காய் சாதம் | Karnataka Brinjal Rice Recipe In Tamil

கத்திரிக்காயை வைத்தது ஒரு வெரைட்டி ரைஸ் ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கர்நாடகாவில் இதை வாங்கி பாத் என்று சொல்லுவார்கள். எத்தனை நாளைக்குத்தான் குழம்பு ரசம் என்று செய்வது. இது போல ஒரே மாதிரியாக செய்து கொடுத்தால் செய்கிறவர்களுக்கு சரி. சாப்பிடுபவர்களுக்கும் சரி போர் அடித்து விடும். ஒருநாள் வித்தியாசமாக கத்தரிக்காயை வைத்து இந்த வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிட்டு தான் பார்ப்போமே. கத்திரிக்காய் சாதம் கர்நாடகத்தின் பாரம்பரிய உணவாகும். கர்நாடகா மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் தமிழ்நாட்டிலும் இது விரும்பி உண்ணப்படுகிறது. வாங்கிபாத் கத்தரிக்காய் பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகையாகும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian, karnataka
Keyword: Karnataka Brinjal Rice
Yield: 4 People
Calories: 44kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 100 கி கத்தரிக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/4 கப் புளி கரைசல்
  • உப்பு தேவையான அளவு

அரைக்க :

  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் தனியா
  • 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்   
  • 1/4 டீஸ்பூன் எள்ளு
  • 4 வர ‌மிளகாய்
  • 4 காஷ்மீர் மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் கசகசா
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்

தாளிக்க :

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • 5 முந்திரி
  • 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் கத்தரிக்காயை நன்கு தண்ணீரில் அலசி விட்டு காம்பு பாகத்தை நறுக்கி விட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் சாதத்தை உதிரி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வறுக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் கடுகு, கடலை பருப்பு, வேர்க்கடலை, முந்திரி சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
  • அதன்பிறகு பொடித்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும். பின் புளிக்கரைசலை ஊற்றி கலந்து மூடி போட்டு கத்தரிக்காயை வேக வைக்கவும்.
  • கத்தரிக்காய் வெந்தவுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லி இலை, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான வாங்கி பாத் தயார். உருளைக்கிழங்கு சுக்கா, தயிர் பச்சடி ஆகியவற்றை இதனுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 44kcal | Carbohydrates: 5.7g | Protein: 8g | Fat: 0.2g | Sodium: 3mg | Potassium: 230mg | Fiber: 3g | Vitamin A: 21IU | Vitamin C: 7.2mg | Calcium: 7mg | Iron: 3.24mg

இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் புளி கூட்டு ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள், மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்!