Home சைவம் கத்தரிக்காய் புளி கூட்டு ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள், மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்!

கத்தரிக்காய் புளி கூட்டு ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள், மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்!

புளிக்குழம்பு கார குழம்பு என்றால் ஒரு தட்டு சாதம் சேர்த்து சாப்பிடுவது பலருடைய வழக்கமாக இருக்கும். அந்த அளவிற்கு அந்த குழம்பு சுவை மிகவும் ருசியானதாக இருக்கும். அதேபோல் புளி கூட்டும் மிகுந்த ருசி உடையதாக இருக்கும். எலுமிச்சை சாதம் புளி சாதம் தக்காளி சாதம் அனைத்திற்கும் வைத்து சாப்பிடக்கூடிய இந்த புளி கூட்டு பலருடைய ஃபேவரட் ஆக இருக்கும். பொதுவாக அனைத்து வளைகாப்பு நிகழ்ச்சிகளிலும் இந்த புளி கூட்டு வைப்பது வழக்கம். இந்த புளி கூட்டில் கத்திரிக்காய் தான் முக்கிய பங்கு வகிக்கும்.

-விளம்பரம்-

ஆனால் இதனுடன் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மாங்காய் என அனைத்தும் சேர்த்து செய்யும் பொழுது இதனுடைய சுவை இன்னும் கூடுதலாகவே நமக்கு கிடைக்கும். கலவை சாதங்களுக்கு மட்டுமில்லாமல் வெறும் சூடு சாதத்தில் இதனை போட்டு பிசைந்து சாப்பிட்டால் ருசி மிகவும் சூப்பராக இருக்கும். இதனுடன் அப்பளம் வைத்து சைட் டிஷ் ஆக சாப்பிட்டால் சொல்லவே தேவையில்லை அவ்வளவு சொர்க்கமாக இருக்கும் இதனை சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே

இதனுடைய சுவை தெரியும். ஆனால் இந்த புளிக்கூட்டு செய்வது மிகவும் சுலபமான ஒரு வேலை தான். அனைத்து காய்கறிகளையும் வெட்டி வைத்தால் போதும் சீக்கிரமாகவே இந்த கூட்டை நம்மால் செய்து விட முடியும். அதிலும் குறைவான நேரத்தில் சூப்பராகவே செய்திட முடியும். இப்ப வாங்க இந்த அருமையான கத்தரிக்காய் புளிகூட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
3 from 2 votes

கத்தரிக்காய் புளி கூட்டு | Brinjal Puli Kootu Recipe In Tamil

புளிக்குழம்பு கார குழம்பு என்றால் ஒரு தட்டு சாதம் சேர்த்து சாப்பிடுவது பலருடைய வழக்கமாக இருக்கும். முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மாங்காய் என அனைத்தும் சேர்த்துசெய்யும் பொழுது இதனுடைய சுவை இன்னும் கூடுதலாகவே நமக்கு கிடைக்கும். கலவை சாதங்களுக்கு மட்டுமில்லாமல் வெறும் சூடு சாதத்தில் இதனை போட்டு பிசைந்து சாப்பிட்டால் ருசி மிகவும் சூப்பராக இருக்கும். இதனுடன் அப்பளம் வைத்து சைட் டிஷ் ஆக சாப்பிட்டால் சொல்லவேதேவையில்லை அவ்வளவு சொர்க்கமாக இருக்கும் இதனை சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Brinjal Puli Kootu
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ கத்தரிக்காய்
  • 2 உருளைக்கிழங்கு
  • 2 முருங்கைக்காய்
  • 1 மாங்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பெரிய தக்காளி
  • சிறிய எலுமிச்சை பழ புளி
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லிதூள்
  • 1/4 டீஸ்பூன் வெல்லம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • கத்தரிக்காய் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மாங்காய் அனைத்தையும் தேவையான வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை வெந்தயம் போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகுவெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு கத்தரிக்காய் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் இந்த மூன்று காய்கறிகளையும் சேர்த்து எண்ணெயிலேயே நன்றாக வதக்க வேண்டும்.
  • பிறகு தேவையான அளவிற்கு உப்பு மிளகாய்த்தூள், மல்லி தூள் சேர்த்து இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்.
  • ஒரு1 5 நிமிடங்கள் நன்றாக வெந்த பிறகு எடுத்து வைத்துள்ள புளியை கரைத்து அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு பத்து நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும்.
  • பத்துநிமிடங்கள் கழித்து எடுத்து வைத்துள்ள வெள்ளத்தை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால் சுவையான கத்தரிக்காய் புளி கூட்டு தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 245g | Cholesterol: 1mg | Sodium: 233mg | Potassium: 233mg | Vitamin A: 13IU | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : கொங்கு கத்திரிக்காய் கிரேவி இப்படி செய்தால் வெரைட்டி ரைஸ், ரொட்டி சப்பாத்தி எல்லாத்துக்குமே இது அட்டகாசமான காம்பினேஷன்!