Advertisement
சைவம்

சுவையான கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி ?

Advertisement

ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் வீட்டில் நீண்ட நாட்கள் கெடாத தொக்கு ஒன்று ஏதாவது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நாம் உணவுகள் சாப்பிடும் பொழுது கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த தொக்கை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது.

இதையும் படியுங்கள் : சுவையான மாசி கருவாட்டு தொக்கு செய்வது எப்படி ?

Advertisement

அந்த வகையில் இன்று நாம் கத்தரிக்காய் தொக்கு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவில் இதுபோன்று நீங்கள் கத்தரிக்காய் தொக்கு செய்தால் கண்டிப்பாக அட்டகாசமாக சுவையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும். அதனால் இன்று கத்தரிக்காய் தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் நாம் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

கத்தரிக்காய் தொக்கு | Brinjal Thokku Recipe in Tamil

Print Recipe
ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் வீட்டில் நீண்ட நாட்கள் கெடாத தொக்கு ஒன்று ஏதாவது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நாம் உணவுகள் சாப்பிடும் பொழுது கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த தொக்கை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் கத்தரிக்காய் தொக்கு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவில் இதுபோன்று நீங்கள் கத்தரிக்காய் தொக்கு செய்தால் கண்டிப்பாக அட்டகாசமாக சுவையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும்.
Course Thokku
Cuisine Indian, TAMIL
Keyword Brinjal, கத்தரிக்காய்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 89

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 7 tbsp எண்ணெய்
  • 4 கத்தரிக்காய் நறுக்கியது
  • 20 சின்ன வெங்காயம் தோல் உரித்தது
  • ¼ கப் வேர்கடலை
  • 2 தக்காளியில் அரைத்த தக்காளி பேஸ்ட்
  • ½ tbsp கடுகு
  • ½ tbsp சோம்பு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 1 tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மல்லித்தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • புளி கரைசல் சிறிய துண்டு புளி ஊற வைத்தது

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும்
    Advertisement
    அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து பொன் நிறமாக வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின் அதே கடாயில் தோலுரித்த வைத்திருக்கும் 20 சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பும் அதை கடாயில் கால் கப் வேர்க்கடலை சேர்த்து அதையும் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின் கடாயில் மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் அரை டீஸ்பூன் கடுகு சேர்க்கவும், கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன், இதனுடன் அரை
    Advertisement
    டீஸ்பூன் சோம்பு, இரண்டு வர மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் இதனுடன் பொடியாக நறுக்கி ஒரு பெரிய வெங்காயத்தையும் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி அதனுடன் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மல்லி தூள் மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பின் நாம் இரண்டு தக்காளியை பேஸ்ட் போல் அரைத்து அந்த பேஸ்ட்டை கடாயில் சேர்த்து மற்றும தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு ஐந்து நிமிடம் கடாயை மூடி விட்டு வேக வையுங்கள் பின் எண்ணெயும் மசாலவும் தனியே பிரிந்து வந்தவுடன்.
  • நாம் முதலில் வதக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய் சின்ன வெங்காயம் மற்றும் வேர்க்கடலையை சேர்த்து கிளறி விட்டு வதக்கவும். பின் ஒரு சிறிய துண்டு புளி ஊறவைத்து கரைத்த சிறிதளவு புளி கரைசலை சேர்த்து ஒரு 15 நிமிடங்கள் நன்றாக வேக விடுங்கள். அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய் தொக்கு தயார்.

Nutrition

Serving: 400gram | Calories: 89kcal | Carbohydrates: 9g | Protein: 13.45g | Fat: 6g | Saturated Fat: 2.1g | Cholesterol: 9.7mg | Sodium: 7mg | Potassium: 387mg | Fiber: 3g | Sugar: 1.05g

English Overview: brinjal thokku is one of the most important dishes in south india. brinjal thokku recipe or brinjal thokku seivathu eppadi or brinjal thokku recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

2 நிமிடங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

4 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

13 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

15 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

17 மணி நேரங்கள் ago