- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Thokku
ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் வீட்டில் நீண்ட நாட்கள் கெடாத தொக்கு ஒன்று ஏதாவது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நாம் உணவுகள் சாப்பிடும் பொழுது கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த தொக்கை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது.
இதையும் படியுங்கள் : சுவையான மாசி கருவாட்டு தொக்கு செய்வது எப்படி ?
அந்த வகையில் இன்று நாம் கத்தரிக்காய் தொக்கு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவில் இதுபோன்று நீங்கள் கத்தரிக்காய் தொக்கு செய்தால் கண்டிப்பாக அட்டகாசமாக சுவையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும். அதனால் இன்று கத்தரிக்காய் தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் நாம் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
English Overview: brinjal thokku is one of the most important dishes in south india. brinjal thokku recipe or brinjal thokku seivathu eppadi or brinjal thokku recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.
Ingredients
Method
முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து பொன் நிறமாக வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
பின் அதே கடாயில் தோலுரித்த வைத்திருக்கும் 20 சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பும் அதை கடாயில் கால் கப் வேர்க்கடலை சேர்த்து அதையும் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின் கடாயில் மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் அரை டீஸ்பூன் கடுகு சேர்க்கவும், கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன், இதனுடன் அரை டீஸ்பூன் சோம்பு, இரண்டு வர மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் இதனுடன் பொடியாக நறுக்கி ஒரு பெரிய வெங்காயத்தையும் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி அதனுடன் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மல்லி தூள் மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பின் நாம் இரண்டு தக்காளியை பேஸ்ட் போல் அரைத்து அந்த பேஸ்ட்டை கடாயில் சேர்த்து மற்றும தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு ஐந்து நிமிடம் கடாயை மூடி விட்டு வேக வையுங்கள் பின் எண்ணெயும் மசாலவும் தனியே பிரிந்து வந்தவுடன்.
நாம் முதலில் வதக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய் சின்ன வெங்காயம் மற்றும் வேர்க்கடலையை சேர்த்து கிளறி விட்டு வதக்கவும். பின் ஒரு சிறிய துண்டு புளி ஊறவைத்து கரைத்த சிறிதளவு புளி கரைசலை சேர்த்து ஒரு 15 நிமிடங்கள் நன்றாக வேக விடுங்கள். அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய் தொக்கு தயார்.






