- Advertisement -
கருவாடு என்றாலே சிலருக்கு அதீத பிரியம் இருப்பது வழக்கம். மேலும், சில கருவாட்டு குழம்பை வைத்து மறுநாள் உண்ணுகையில் அதிகப்படியாக சாப்பிடுவதை காணலாம். அவ்வாறு உள்ள கருவாட்டு பிரியர்களுக்கு இந்த மாசிக்கருவாட்டு தொக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : தெருவே கமகமக்கும் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி ?
- Advertisement -
இந்த கருவாட்டுத்தொக்கு எப்படி செய்யலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் இதை செய்து பாருங்கள் இதன் சுவை அற்புதமாக இருக்கும்.
மாசி கருவாட்டு தொக்கு | Masi Karruvatu Thokku Recipe In Tamil
கருவாடு என்றாலே சிலருக்கு அதீத பிரியம் இருப்பது வழக்கம். மேலும், சில கருவாட்டு குழம்பை வைத்து மறுநாள் உண்ணுகையில் அதிகப்படியாக சாப்பிடுவதை காணலாம். அவ்வாறு உள்ள கருவாட்டு பிரியர்களுக்கு இந்த மாசிக்கருவாட்டு தொக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இந்த கருவாட்டு தொக்கு எப்படி செய்யலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையானவை, மற்றும் செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.
Calories: 164.34kcal
தேவையான பொருட்கள்
- 25 கிராம் மாசி கருவாடு 1 துண்டு
- 100 கிராம் பெரிய வெங்காயம்
- 100 கிராம் பழுத்த தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 குழிக்கரண்டி எண்ணெய்
- ½ டேபிள் ஸ்பூன் கடுகு
- ½ டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- கொத்தமல்லி சிறிதளவு
- கருவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
- மாசி கருவாட்டு துண்டை அம்மியில் வைத்து பொடித்து கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.
- தக்காளியையும், பச்சை மிளகாயையும், பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- பின்பு ஒரு கடையை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்த பின்னர் கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி போல் வந்ததும் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
- தக்காளி வெந்ததும் பொடித்து வைத்துள்ள மாசிதூள் மற்றும் அரை டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து பிரட்டவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டவும்.உப்பு சரி பார்த்துக்கொண்டு தொக்கு பதத்திற்கு வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- இப்பொழுது சுவையான மாசி தொக்கு ரெடி.
- சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிட அருமையான சைட்டிஷ் இது.
Nutrition
Serving: 50gram | Calories: 164.34kcal | Protein: 15g | Fat: 8g | Saturated Fat: 3.5g | Sodium: 125mg | Potassium: 87mg | Fiber: 6.8g