Home சைவம் இனி சப்பாத்திக்கு ருசியான ப்ரோக்கோலி பன்னீர் கறி இப்படி செய்து பாருங்க!

இனி சப்பாத்திக்கு ருசியான ப்ரோக்கோலி பன்னீர் கறி இப்படி செய்து பாருங்க!

வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு நாம் உருளைக்கிழங்கு, பட்டாணி, அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இதனையே மீண்டும் மீண்டும் செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது செய்து சாப்பிடணும் என்று நினைக்கிறீர்களா?

-விளம்பரம்-

அப்படியெனில் இந்த புரோக்கோலி பனீர் கறியை செய்து பாருங்கள். இந்த ப்ரக்கோலியை பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். சப்பாத்தி, நாண் போன்ற உணவுகளுக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.

Print
No ratings yet

ப்ரோக்கோலி பன்னீர் கறி| Broccoli Paneer Curry

வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு நாம் உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃபிளவர் அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இதனையே மீண்டும் மீண்டும் செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது செய்து சாப்பிடணும் என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் இந்த புரோக்கோலி பனீர் கறியை செய்து பாருங்கள். சப்பாத்தி, நாண் போன்ற உணவுகளுக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Paneer Gravy
Yield: 4 People
Calories: 340kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 400 கிராம் புரோக்கோலி
  • 200 கிராம் பன்னீர்
  • 3 பெரிய
  • 3 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 6 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • உப்பு தேவையானஅளவு
  • 1 டேபிள் ஸ்பூன் சிக்கன் மசாலா
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • எண்ணெய் தேவையானஅளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 2 டேபிள் ஸ்பூன் பட்டர்

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் புரோக்கோலியை நறுக்கி உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.
  • பின் வாணலியில் பட்டர் விட்டு சுத்தம் செய்த புரோக்கோலியை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்கி எடுக்கவும்.
  • பனீரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து வெடித்ததும் இடித்த பூண்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
  • பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின் மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  • பின் சிறிது தண்ணீர் தெளித்து தக்காளி மசிந்து வரும் வரை நன்றாக கிளறவும்.
  • பின் வதக்கிய புரோக்கோலி மற்றும் பனீரை சேர்த்து மெதுவாக கிளறவும்
  • பத்து நிமிடம் வரை மெல்லிய தீயில் மூடி வைக்கவும். பின் திறந்து மெதுவாக கிளறி விட்டு இறக்கவும்.
  • சுவையான ஆரோக்கியமான புரோக்கோலி பனீர் கறி ரெடி.

Nutrition

Serving: 700g | Calories: 340kcal | Carbohydrates: 6.64g | Protein: 2.8g | Fat: 0.47g | Potassium: 316mg | Fiber: 2.6g | Vitamin A: 623IU | Vitamin C: 89.2mg | Calcium: 47mg

இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற பன்னீர் பீர்க்கங்காய் கிரேவி இப்படி செய்து சுடான சாதத்துன் பிசைந்து சாப்பிட்டு பாருங்க!