பட்டர் சிக்கன் கிரேவி இதே முறையில் ருசியாக செய்து கொடுத்தால் நிஜமாக தங்கவளை வாங்கி தருவார்களோ இல்லையோ. வீட்டில் இருக்கும் அனைவரும் நிச்சயம் பாராட்டுவார்கள். அந்த பாராட்டு சமையல் செய்தவருக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும். அப்படிப்பட்ட பாராட்டை கொடுக்கக் கூடிய ஒரு ரெசிபியை தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஹோட்டல்களுக்கு சென்றால் அனைவரும் விருமி உண்ணும் பட்டர் சிக்கன் கிரேவி எப்படி செய்வது. தெரிந்து கொள்வோம் .
உலகம் முழுவதுமே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக கோழிக்கறி உள்ளது. எந்த நாடாக இருந்தாலும் அங்கு கோழிக்கறி பிரியர்களே அதிகமாக இருக்கிறார்கள். அனைவரும் விரும்பும் கோழி கறியினை வைத்து கோழி குழம்பு, கோழி வறுவல், கோழி மசாலா இவ்வாறு பலவித உணவுகளை சமைக்கின்றோம். அதேபோல் சிக்கனை வைத்து சற்று வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய பட்டர் சிக்கன் கிரேவியை எப்படி செய்வது என்பதனை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
பட்டர் சிக்கன் கிரேவி | Butter Chicken Gravy
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கிலோ சிக்கன்
- 1 கப் கெட்டியான தயிர்
- 4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 3 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1 தேக்கரண்டி கரம் மசாலா
- 1/4 தேக்கரண்டி சிவப்பு தந்தூரி கலர்
- 4 தக்காளி பொடியாக நறுக்கியது
- 1/2 தேக்கரண்டி வெந்தயம்
- தக்காளி சார்
- க்ரீம்
- சிறிது முந்திரி பேஸ்ட் செய்கொள்ளவும்
- 1 மேசைக்கரண்டி கொத்தமல்லி நறுக்கியது
- 1 தேக்கரண்டி எண்ணெய்
- 1 மேசைக்கரண்டி வெண்ணெய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் தயிரில் 2 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டிமிளகாய் தூள், உப்பு மற்றும் சிவப்பு தந்தூரி கலர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- பின்னர் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு. அதில் தயிர் கலவையை ஊற்றி நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு மணிநேரம் ஆனப் பின்பு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் போட்டு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுத்து. 2 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- அடுத்து வெண்ணெயை போட்டு, தட்டு கொண்டு மூடி, தீயை குறைவில் வைத்து தக்காளியை வேக வைக்க வேண்டும். எண்ணெயானது தனியே பிரியும் போது, அதில் 1 தேக்கரண்டிமிளகாய் தூள், கரம் மசாலா, க்ரீம், உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
- இறுதியில் அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் தக்காளி சர் ஊற்றி கிளறி, மூடி வைத்து 5-10 நிமிடம் வேக வைத்து இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியைத் கரவி இறக்க வேண்டும்.