பட்டர் இறால் முட்டை மசாலா மிகவும் சுவையான மற்றும் நமது நாவின் ருசிக்கு அடிமையாக்கும் உணவாகும். எதிர்ப்பு சக்தியை கூட்டும் இறால்..!பலருக்கு எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகம் ஆகி கொண்டே வருகிறது.அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கவே இந்த இறால்கள் பெரிதும் பயன்படுகிறது.
இவற்றில் உள்ள அதிகப்படியான ஜின்க் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கூட்ட இந்த இறால் உதவுகிறது. பட்டர் இறால் முட்டை மசாலா இறால்கள் முட்டை சேர்த்து , இந்த மசாலா வகையின் குறிப்புகளுடன் மனம் வீசும் வெண்ணெய் வாசனையுடன் செய்யப்படும் செய்முறை. பட்டர் இறால் முட்டை மசாலா மினுமினுப்புடன் முட்டை சேர்த்து செய்யப்படும் மசாலா. அவை சமமாக சுவையாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும்.
இந்த செய்முறை விருந்து உணவுக்கு ஏற்றது, ஏனெனில் பட்டர் இறால் முட்டை மசாலா பார்க்கவே சாப்பிட தூண்டும் வகையில் இருக்கும். இது பொதுவாக சீன விருந்துகளிலும் பரிமாறப்படுகிறது. பட்டர் இறால் முட்டை மசாலா உணவைச் செய்வது மிகவும் எளிதானது.
பட்டர் இறால் முட்டை மசாலா | Butter Prawn Egg Masala Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கப் பட்டர்
- 1/4 கிலோ இறால்
- 4 முட்டை
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 2 பட்டை
- 2 கிராம்பு
- 1 பிரிஞ்சி இலை
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 மஞ்சள் தூள்
- உப்பு தேவைக்கேற்ப
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம்மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டையை வேக வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் ப்ரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும், வெங்காயத்தைச்சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும்,தக்காளியைச் சேர்த்துநன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கி, இறாலைச் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- மசாலா திக்கானதும் அதனுடன் பட்டர் மற்றும்வேகவைத்த முட்டைகளை குறுக்காக வெட்டிப் போட்டு நன்கு பிரட்டி இறக்கவும். சுவையான பட்டர்இறால் முட்டை மசாலா தயார்.
செய்முறை குறிப்புகள்
Nutrition
இதையும் படியுங்கள் : வீடே கமகமக்கும் புதினா இறால் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!