Home சைவம் இட்லி, தோசை, சாதத்துடன் கூட சாப்பிட ருசியான முட்டைகோஸ் கிரேவி இனி இப்படி செய்து பாருங்க!

இட்லி, தோசை, சாதத்துடன் கூட சாப்பிட ருசியான முட்டைகோஸ் கிரேவி இனி இப்படி செய்து பாருங்க!

இன்று நாம் முட்டைகோஸை வைத்து வித்தியாசமான மற்றும் சுவையான முட்டைகோஸ் கிரேவி எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். இந்த முட்டைகோஸ் கிரேவியை இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டைகோஸ் என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது வேகும் போது வரக்கூடிய வாசம் தான். சமைத்து முடித்த பின்பும், சில சமயம் அதில் முடித்த மாதிரியான வாடை வீசும். இது சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைகோஸை வைத்து இந்த கிரேவியை செய்தால் எந்த வாசமும் வராது. அட்டகாசமான சுவையில் இருக்கும்.

-விளம்பரம்-

முட்டைகோஸ் வெயில், குளிர் காலம் என அனைத்து சீசனிலும் கிடைக்கும் ஒரு அற்புதமான காய்கறி. முட்டைகோஸில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். வைட்டமின் சி, வைட்டமின் கே, தியாமின், நியாசின், ஃபோலேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களுடன் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முட்டைகோஸில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். முட்டைகோஸ் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த முட்டைகோஸ் கிரேவி சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால் இன்று முட்டைகோஸ் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Print
1.50 from 2 votes

முட்டைகோஸ் கிரேவி | Cabbage Gravy Recipe In Tamil

இன்று நாம் முட்டைகோஸை வைத்து வித்தியாசமான மற்றும் சுவையான முட்டைகோஸ் கிரேவி எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறிவோம். இந்த முட்டைகோஸ் கிரேவியை இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டைகோஸ் என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது வேகும் போது வரக்கூடிய வாசம் தான். சமைத்து முடித்த பின்பும், சில சமயம் அதில் முடித்த மாதிரியான வாடை வீசும். இது சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைகோஸை வைத்து இந்த கிரேவியை செய்தால் எந்த வாசமும் வராது. அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Cabbage Gravy
Yield: 3 People
Calories: 42kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி முட்டைகோஸ்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/2 கப் புதினா, கொத்தமல்லி
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • கடலை எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முட்டைகோஸ், தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு வாசனை போனதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு முட்டைகோஸ் சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு வதக்கி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முட்டைகோஸ் கிரேவி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 42kcal | Carbohydrates: 5.2g | Protein: 6.1g | Fat: 1.1g | Sodium: 20mg | Potassium: 170mg | Fiber: 2.2g | Vitamin A: 98IU | Vitamin C: 36.6mg | Calcium: 40mg | Iron: 4.7mg

இதனையும் படியுங்கள் : சுவையான தக்காளி முட்டைகோஸ் காரக் கறி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! சுட சுட சாதத்துடன் சாப்பிட பக்காவான ரெசிபி!