சுவையான தக்காளி முட்டைகோஸ் காரக் கறி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! சுட சுட சாதத்துடன் சாப்பிட பக்காவான ரெசிபி!

- Advertisement -

முட்டைக்கோசை வைத்து வித்தியாசமான ஒரு ரெசிபியைத்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். சப்பாத்தி, பூரி, சாதத்திற்கு, சூப்பரான சைட் டிஷ் இது. இதை முட்டைக்கோஸ் பால்கறி என்று சொல்லுவார்கள். வித்தியாசமான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் முட்டைக்கோஸ் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

தக்காளி முட்டைகோஸ் காரக் கறி சாப்பிடுவதற்கு தனி ருசிதான். என்ன தான் நம்முடைய வீட்டில் அந்த முட்டைகோசுப் பக்குவமாக பார்த்து பார்த்து செய்தாலும், அந்த பொரியல் ஹோட்டல் பொரியல் சுவைக்கு ஈடாகாது. ஆனால், பின்வரும் குறிப்புகளை பின்பற்றி உங்க வீட்ல ஒரு முறை தக்காளி முட்டைகோஸ் காரக் கறி  செய்து பாருங்க. முட்டைக்கோஸ் அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறி என்பது நமக்குத் தெரியும். அதோடு வைட்டமின்களும் தாதுப் பொருள்களும் அதிகம். அச்சு அசல் ஓட்டல் சுவை அப்படியே கிடைக்கும். வாங்க அந்த அட்டகாசமான தக்காளி முட்டைகோஸ் காரக் கறி ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -
Print
5 from 1 vote

தக்காளி முட்டைகோஸ் காரக் கறி | Tomato Cabbage Curry Recipe In Tamil

தக்காளி முட்டைகோஸ் காரக் கறி சாப்பிடுவதற்கே தனி ருசிதான். என்ன தான் நம்முடைய வீட்டில் அந்த முட்டைகோசுப் பக்குவமாக பார்த்து பார்த்துசெய்தாலும், அந்த பொரியல் ஹோட்டல் பொரியல் சுவைக்கு ஈடாகாது. ஆனால், பின்வரும் குறிப்புகளைபின்பற்றி உங்க வீட்ல ஒரு முறை தக்காளி முட்டைகோஸ் காரக் கறி  செய்து பாருங்க. முட்டைக்கோஸ் அதிக அளவில் நீர்ச்சத்துநிறைந்த காய்கறி என்பது நமக்குத் தெரியும். அதோடு வைட்டமின்களும் தாதுப் பொருள்களும்அதிகம். அச்சு அசல் ஓட்டல் சுவை அப்படியே கிடைக்கும். வாங்க அந்த அட்டகாசமான தக்காளிமுட்டைகோஸ் காரக் கறி ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Tomato Cabbage Kaara Curry
Yield: 3
Calories: 238kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ முட்டைகோஸ்
  • 1 தக்காளி சிறியது
  • 1 வெங்காயம் சிறியது
  • 2 தே. கரண்டி. மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • கடுகு தாளிக்க

செய்முறை

  • முட்டைகோஸை 1/2 அங்குல நீளத்திற்கு நன்றாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்து உடன் வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் இவற்றையும் உடன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி பின்னர் நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸையும் சேர்க்கவும்.
  • சிறிதுதண்ணீர் சேர்த்து வாணலியை கிளறி வரவும். 10 நிமிடம் மூடி அவ்வப்பொழுது தண்ணீர் நன்கு சுண்டியதும் ஒரு தேக்கரண்டி எண்னை விட்டு கிளறி 1 நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்.
  • தக்காளி முட்டைகோஸ் காரக் கறி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 238kcal | Carbohydrates: 72g | Protein: 12g | Potassium: 381mg | Fiber: 2g

இதையும் படியுங்கள் : ருசியான முட்டைகோஸ் மசாலா கூட்டு இப்படி செய்து கொடுத்து பாருங்கள்! மதிய உணவுக்கு பக்காவான கூட்டு!