- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
பொதுவாகவே முட்டைகோஸில் பருப்பு சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்வது தான் வழக்கமாக இருக்கும். இப்படி செய்யும் முட்டை கோஸில் ஒருவித பச்சை வாசனை இருக்கும். எனவே பலருக்கும் இதன் சுவை பிடிப்பதில்லை. ஆனால் இதில் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து அதிகம் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகளை கொடுக்கிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறையாவது முட்டைகொஸை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
முட்டை கோஸை எப்படி சமைத்தாலும் அதில் உள்ள பச்சை வாசனை காரணமாக பலரும் இதனை தவிர்த்து வருகின்றனர். எனவே இதனுடன் மசாலாக்கள் சேர்த்து சுவையான முட்டைகோஸ் மசாலா கூட்டு செய்து கொடுத்து பாருங்கள். இந்த முட்டைகோஸ் மசாலா கூட்டு மிகவும் ருசியாகவும், சுவையாகவும் இருக்கும். இதனை முட்டைகோஸில் செய்தது என்று எவரும் கண்டு பிடிக்க முடியாது. வாருங்கள் இப்படி அசத்தலான முட்டைகோஸ் வருவலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
முட்டைக்கோஸ் கொண்டு விதவிதமான உணவு வகைகளை தயார் செய்தாலும் ஒரு முறை இப்படி முட்டைகோஸ் மசாலா கூட்டு வைத்து பாருங்கள். நீங்களே அசந்து போகும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். மிக மிக சுலபமாக சட்டென செய்து விடக் கூடிய இந்த முட்டைகோஸ் மசாலா கூட்டு, கூட்டு வகைகளிலேயே வித்தியாசமான சுவையுடன் இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த முட்டைகோஸ் மசாலா கூட்டு எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கின்றோம்
இதையும் படியுங்கள் : மாலை நேரம் சூடாக ஸ்நாக்ஸ் சாப்பிட ருசியான முட்டைகோஸ் கோப்தா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
இதில் பாசிப்பருப்பைப் போட்டு வேகவைக்கவும். முக்கால் பதம் வெந்ததும், அதில் நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸை போடவும்.
இரண்டும் சேர்ந்து வெந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் இவைகளை வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்து வெந்த கலவையில் கொட்டவும்,
பின்னர்உப்பு போட்டு கொதிக்க வைத்து கடுகு. சீரகம் தாளித்து கொட்டவும்.அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லித்தழைத் தூவி சாப்பிட பயன்படுத்தவும்.
முட்டைகோஸ் மசாலா கூட்டு தயார்






