மாலை நேரம் சூடாக ஸ்நாக்ஸ் சாப்பிட ருசியான முட்டைகோஸ் கோப்தா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

முட்டைகோஸ் உடலுக்கு மிகவும் சத்து நிறைந்தது. குழந்தைகளுக்கு முட்டைகோஸ் என்றால் பிடிக்காது, சாப்பிட அடம் பிடிப்பார்கள். அப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு முட்டைகோஸ் வைத்து வித்தியாசமாக சாப்பாடு செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் முட்டைகோஸ் கோப்தா எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க. பொதுவாக கோப்தா என்பது ஒரு வட இந்திய ரெசிபி.

-விளம்பரம்-

சுலபமாக எதையாவது சமைத்து சாப்பிட நினைத்தால், முட்டைகோஸ் கோப்தா செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் ஈஸியான, அதே சமயம் சுவையான ரெசிபியும் கூட. இது நிச்சயம் வீட்டில் உள்ளோருக்கு பிடித்தவாறு இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

- Advertisement -

 நாம் எப்போதும் செய்யும் சாதாரணமான போண்டாவை போல இல்லாமல் நல்ல பதத்தில் சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும். அதே நேரத்தில் இது நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும்.டீ, காபியுடன் மாலை நேரங்களில் சிற்றுண்டி வகையாக செய்யக்கூடிய கட்லெட்  போன்ற ரெசிபிகளில் இதுவும் ஒன்று. முட்டைகோஸ் கொண்டு செய்யப்படும் இந்த கோப்தா ரொம்பவே வித்தியாசமான ஒரு சுவையை கொடுக்க இருக்கிறது. கோப்தா சாப்பிட்டிருப்போம், இது போல கொஞ்சம் முட்டைகோஸ் சேர்த்து செஞ்சு பாருங்க சுவையோ அட்டகாசமாக இருக்கும். வாங்க முட்டைகோஸ் கோப்தா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்குவோம்.

Print
No ratings yet

முட்டைகோஸ் கோப்தா | Cabbage Kofta Recipe In Tamil

முட்டைகோஸ் கோப்தா, எப்போதும் செய்யும் சாதாரணமான போண்டாவை போல இல்லாமல் நல்ல பதத்தில் சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும்.அதே நேரத்தில் இது நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும்.டீ, காபியுடன் மாலை நேரங்களில்சிற்றுண்டி வகையாக செய்யக்கூடிய கட்லெட்  போன்ற ரெசிபிகளில் இதுவும் ஒன்று. முட்டைகோஸ் கொண்டு செய்யப்படும் இந்த கோப்தா ரொம்பவே வித்தியாசமானஒரு சுவையை கொடுக்க இருக்கிறது. கோப்தா சாப்பிட்டிருப்போம், இது போல கொஞ்சம் முட்டைகோஸ்சேர்த்து செஞ்சு பாருங்க சுவையோ அட்டகாசமாக இருக்கும். வாங்க முட்டைகோஸ் கோப்தா எப்படிசெய்றதுன்னு தெரிஞ்சிக்குவோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Cabbage Kofta
Yield: 4
Calories: 238kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கடலைமாவு
  • 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 3 கப் முட்டைகோஸ் துருவியது
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  •  
    முட்டை கோஸினை காரட் துருவது போல் துருவி கொள்ளவும்.துருவிய கோஸ், கடலைமாவு, தூள் வகைகள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • (தண்ணீர் சேர்க்க வேண்டாம். கோஸ் துருவலிலே தண்ணீர் நிறைய இருக்கும்.)சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  • குழி பணியார கடாயில் சிறு துளி எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை போட்டு வேகவிடவும்.
  • ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பிபோட்டு வேகவிடவும். ஒவ்வொரு பக்கமும் நன்றாக வேகவிடவும்.சுவையான எளிதில் செய்ய கூடியகோப்தா ரெடி

Nutrition

Serving: 400g | Calories: 238kcal | Carbohydrates: 72g | Protein: 13g | Fat: 8g | Potassium: 381mg | Calcium: 1mg