அடுத்தமுறை வீடே மணக்கும் படி ருசியான குடைமிளகாய் சாம்பார் இப்படி ட்ரை பண்ணி பாருங்க அற்புதமான ருசியில் இருக்கும்!

- Advertisement -

சாப்பாட்டில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட சிலருக்கு சைவ சாப்பாடு தான் மிகவும் அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் சாதம் என்றால் சொல்லவே வேண்டாம் விரும்பி சாப்பிடுவார்கள். நம்முடைய தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் இந்த சாம்பாரும் ஒன்று. ஒரு நல்ல விசேஷம் என்றால் சாம்பார் இல்லாமல் நிச்சயம் இருக்காது. குறிப்பாக செவ்வாய், வெள்ளி நாட்கள் என்றாலே சாம்பார் தான் மெனு. எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். நம் வீடுகளில் பெரும்பாலும் காலை, இரவு உணவு இட்லி, தோசையாக இருக்கும். அதற்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் வைத்து சாப்பிடுவோம்.

-விளம்பரம்-

எப்போதும் இதே வைத்து சாப்பிடுவது சலிப்பாக இருக்கும். புதிதாக செய்தால் சுவையாக, டேஸ்டாக, சாப்பிட ஆர்வமாக இருக்கும். அந்தவகையில் இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட குடைமிளகாய் சாம்பார் செய்து பாருங்க. குடைமிளகாயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்த காய்கறி செரிமான பிரச்சனைகள், வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடியது. எனவே அடிக்கடி குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால், பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். குடைமிளகாயை கொண்டு பல சுவையான ரெசிபிக்களை தயாரிக்கலாம். அதில் ஒன்று தான் குடைமிளகாய் சாம்பார். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -
Print
1 from 1 vote

குடைமிளகாய் சாம்பார் | Capsicum Sambar Recipe In Tamil

நம்முடைய தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் இந்த சாம்பாரும் ஒன்று. ஒரு நல்ல விசேஷம் என்றால் சாம்பார் இல்லாமல் நிச்சயம் இருக்காது. குறிப்பாக செவ்வாய், வெள்ளி நாட்கள் என்றாலே சாம்பார் தான் மெனு. எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். நம் வீடுகளில் பெரும்பாலும் காலை, இரவு உணவு இட்லி, தோசையாக இருக்கும். அதற்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் வைத்து சாப்பிடுவோம். எப்போதும் இதே வைத்து சாப்பிடுவது சலிப்பாக இருக்கும். புதிதாக செய்தால் சுவையாக, டேஸ்டாக, சாப்பிட ஆர்வமாக இருக்கும். அந்தவகையில் இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட குடைமிளகாய் சாம்பார் செய்து பாருங்க.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Capsicum Sambar
Yield: 4 People
Calories: 39kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 2 குடைமிளகாய்
  • 1 கப் பாசிப்பருப்பு
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1/4 கப் புளி கரைசல்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 5 பல் பூண்டு
  • 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 வர ‌மிளகாய்

செய்முறை

  • முதலில் துவரம் பருப்பு மற்றும் ‌பாசிப்பருப்பை நன்கு கழுவி விட்டு குக்கரில் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு குடைமிளகாய் சேர்த்து அதனுடன் உப்பு, சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • அதன்பிறகு வேக வைத்துள்ள பருப்பு மற்றும் புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதித்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான குடைமிளகாய் குழம்பு தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 39kcal | Carbohydrates: 9g | Protein: 3.5g | Fat: 0.5g | Sodium: 2.24mg | Potassium: 187mg | Fiber: 2.75g | Vitamin A: 306IU | Vitamin C: 150mg | Calcium: 17.95mg | Iron: 2.58mg

இதனையும் படியுங்கள் : கமகமனு ருசியான குடைமிளகாய் தோசை இரவு டிபனுக்கு இப்படி செய்து பாருங்கள்! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!