கேரட் சேர்த்து ஒருமுறை லெமன் சாதம் இப்படி செய்து பாருங்க! எப்பொழுதும் செய்யும் சுவையை விட சற்று கூடுதல் சுவையில் இருக்கும்!

- Advertisement -

ஒரே மாதிரி லெமன் சாதம் சாப்பிட்டு போரடிக்குது. இந்த லெமன் சாதத்தை இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக எப்படி மாற்றலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கேரட் சேர்த்த ஸ்பெஷல் எலுமிச்சை பழ சாதத்தை எப்படி செய்வது. சாதம் குழையாமல் உப்பு போட்டு வடித்து தனியாக எடுத்து வைத்துக் இப்படி கேரட் சேர்த்து ஒருமுறை லெமன் சாதம் செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

லெமன் சாதம் இப்படிக்கூட செய்யலாமா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போச்சே! எப்பொழுதும் செய்யும் சுவையை விட சற்று கூடுதல் சுவையில் இருக்கும்.பிள்ளைகளுக்கு பள்ளிக்கு மதிய உணவு தயாரிக்க வேலையில். தினம் தினம் புதிதாக என்ன சமைக்க வேண்டும் என்று முதல் நாளே மறுநாள் மதிய உணவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வைக்க வேண்டும். அவ்வாறு லஞ்ச் பாக்ஸிற்க்கு ஏற்ற ஒரு சாதம் என்றால் அதில் ஒன்றுதான் லெமன் சாதம்.

- Advertisement -

லெமன் சாதம் அனைவரது வீட்டிலும் சுலபமாக செய்யப்படுகிறது. ஆனால் எப்பொழுதும் செய்யும் சுவையை விட இவ்வாறு கேரட் அரைத்து, சேர்த்து ஒரு முறை செய்தால் இதன் சுவை சற்று கூடுதலாக, அசத்தலாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி அதிகப்படியான சுவையில் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
4.50 from 2 votes

கேரட் லெமன் சாதம் | Carrot Lemon Rice Recipe In Tamil

லெமன் சாதம் இப்படிக்கூட செய்யலாமா? இத்தனைநாட்களாக இது தெரியாமல் போச்சே! எப்பொழுதும் செய்யும் சுவையை விட சற்று கூடுதல் சுவையில்இருக்கும்.பிள்ளைகளுக்கு பள்ளிக்கு மதிய உணவு தயாரிக்க வேலையில். தினம் தினம் புதிதாகஎன்ன சமைக்க வேண்டும் என்று முதல் நாளே மறுநாள் மதிய உணவிற்கு என்ன செய்ய வேண்டும்என்று திட்டம் தீட்டி வைக்க வேண்டும். அவ்வாறு லஞ்ச் பாக்ஸிற்க்கு ஏற்ற ஒரு சாதம் என்றால்அதில் ஒன்றுதான் லெமன் சாதம். வாருங்கள் இதனை எப்படி அதிகப்படியான சுவையில்செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Carrot Lemon Rice
Yield: 4
Calories: 61kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 1 பௌல் உதிரியாக வடித்த சாதம்
 • 1 எலுமிச்சை பெரியது
 • 2 பச்சை மிளகாய்
 • கறிவேப்பிலை சிறிது
 • உப்பு தேவையான அளவு
 • 1 கேரட்
 • மஞ்சள் தூள் சிறிது
 • பெருங்காயம் சிறிது

தாளிக்க

 • கடுகு சிறிது
 • சீரகம் சிறிது
 • உளுந்து சிறிது
 • கடலைப்பருப்பு சிறிது
 • எண்ணெய் சிறிது

செய்முறை

 • எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். அதில் கால் கப் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.
 • பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும், கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். தாளித்த வற்றுடன் பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் துருவிய கேரட் சேர்த்து பிரட்டி 2 நிமிடம் மூடி வைக்கவும்.
   
 • கேரட் துருவலுடன் எலுமிச்சை கலவை மற்றும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறு தீயில் கொதிக்க விடவும். மஞ்சள் தூள் வாசம் போனதும் எடுத்து சாதத்தில் சேர்த்து கலந்து விடவும்.
 • அரை மணி நேரம் சாதம் ஊறிய பின்னர் பரிமாறவும். சுவையான கேரட் எலுமிச்சை சாதம்

Nutrition

Serving: 100g | Calories: 61kcal | Carbohydrates: 7g | Protein: 1.2g | Fat: 0.5g | Potassium: 405mg | Calcium: 32mg | Iron: 1.2mg