சுவையான கேரட் பாயாசம் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும்!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த கேரட் பாயாசம் ரெசிபி உங்களுக்கு தான்! இந்த ரெசிபி தென் இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர்.

By Prem Kumar · 3/4/2024

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த கேரட் பாயாசம் ரெசிபி உங்களுக்கு தான்! இந்த ரெசிபி தென் இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். இது கீர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கேரட் பாயாசம் ரெசிபி அதிக பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான கேரட் பாயாசம் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இது அனைத்து பருவங்களுக்கும் மிகவும் பொருத்தமானது.

இந்த ரெசிபி கொஞ்சம் இனிமையானதாக இருப்பினும், ஒரு சத்தான ரெசிபி ஆகும். பாயாசம் ரெசிபிகள் பல இந்தியர்களுக்கு பிடித்த சமையல் என்பதால், கேரட் பாயாசம் அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக உள்ளது. எப்பொழுதும் டீ, காபி, பால், கூல்ட்ரிங்ஸ், ஜூஸ் என ஒரே மாதிரியாக குடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடிய இந்த கேரட் பாயாசத்தை நாம் செய்து குடிக்கலாம். இந்த சுவையான ரெசிபி வீட்டில் நடைபெறும் பல்வேறு விசேஷங்களுக்கு தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் A உள்ளதால் இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

இந்த சுவையான கேரட் பாயாசம் ரெசிபியை வீட்டில் முயற்சி செய்து உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்கவும். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு இந்த கேரட் பாயாசம் செய்து கொடுத்தால், அவர்களின் பசி அடங்குவதோடு, உடலுக்கு சத்தானதும் கூட. இனி இந்த கேரட் பாயாசத்தை கடைகளில் சென்று வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை. இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் செய்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க கேரட் பட்டாணி சாதம் இப்படி செய்து பாருங்க! அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி!

Recipes AMP · Quick view
View full