- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான லஞ்ச் செய்து போர் அடிக்குதா இனி காலையில் இந்த கேரட் பட்டாணி சாதத்தை செய்து ஸ்கூலுக்கு கொடுத்து விடுங்கள். உடலுக்கு நல்ல சத்துக்கள் அளிக்கும்.! இது குழந்தைகளுக்கான சாதம் இது ஈசியாக செய்யக்கூடிய உணவு. குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். கேரட் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதோடு இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். எளிதில் செரிமானம் ஆக கூடும். நார்ச்சத்து நிறைந்தது.
குழந்தையின் செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கிறது. இதில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வெரைட்டி ரைஸ் என்றால் அதில் இந்த கேரட் பட்டாணி சாதத்திற்கு முதலிடம் உண்டு. கேரட் சாதம் தானே, எல்லோருக்கும் செய்ய தெரியுமே. ஆனால், வழக்கம் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு முறை இந்த கேரட் பட்டாணி சாதத்தை ட்ரை பண்ணி பாருங்க. சுவையிலும் மணத்திலும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும். இதனை பிரஷர் குக்கரில் செய்யலாம். இது விரைவாக செய்யக் கூடிய உணவு. ஆகையால் அலுவலகம் செல்வோருக்கும், குழந்தைகளின் மதிய உணவிற்கும் ஏற்றதாகும். இந்த கேரட் பருப்பு சாதத்தை உருளைக்கிழங்கு வருவல், வெண்டைக்காய் பொரியல், மற்றும் அப்பளத்துடன் பரிமாறலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான கேரட் பாதாம் போளி வீட்டிலயே சுலபமாக செய்து எப்படி தெரியனுமா? தெரியாதவுங்க தெரிஞ்சிகொங்க!
Ingredients
Method
முதலில் அரிசியை நன்கு கழுவி விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து கொள்ளவும். பட்டாணியை இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை, புதினா சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதன் பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், பிரியாணி தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் ஊறவைத்த பட்டாணி, நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும்.
பின் ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடிந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கேரட் பட்டாணி சாதம் தயார்.






